பக்கம்:வழுவிலா மணிவாசகர்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 வழுவிலா மணிவாசகர் நிலைகுலையச் செய்ய அவர் உள்ளம் விரும்பவில்லை. நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானே இதற்கு நாயகமே" என்று அவர் வாய் இசைத்தது. எனவே பழியைத் தம்பேரில் ஏற்றுக்கொண்டார். எண்ணிக்கூடப் பார்க்கவில்லை. ஆண்டவன் அடித்தடித்து அக்காரம் தீட்டுவான்' என்ற உணர்வில், குதிரைகள் வரும் என்று செய்தி சொல்லி அனுப்பிவிட்டார். அடியவரை அல்லல்படுத்தி ஆட்கொள்வது ஆண்டவன் இயல்பு. நினைந்துருகும் அடியாரை நைய வைத்தாய்' என்ருர் அப்பர். நண்ணுதார் முறுவலிப்ப நல்லுற்ருர் கரைந் தேங்க, எண்ணருத் துயர் விளைத்தல் இவையென்ன உலகி யற்கை' என்ருர் நம்மாழ்வார். துயரப்படுகின்றவர் பாக்கியவான்கள் என்ருர் இயேசு. எனவே, இறைவனடிய வர்கள் துன்பத்தினடியில், புடமிட்ட பொன்னக ஒளிர வேண்டியவர்கள். அந்த நியதிப்படி மணிவாசகரும் எதையும் ஏற்றுக்கொள்ளத் தயாராளுர், மற்றும் அவர் உள்ளம் 'களிப்பெலாம் மிகக் கலங்கிடுகின்றேன்' என்று இறை வனிடம் கூறித் துன்பத்தையே விரும்பிற்று. அதிலேதான் ஆண்டவன் அருள் நலத்தைக் காணமுடியும் என்பது நல்லவர் முடிவன்ருே இறைவன் அவர் பொன் உள்ளத்தை மேலும் புடமிட்டு உலகுக்கு உணர்த்த நினைத்தான். எனவே, அவர் கனவில் தோன்றி, நீ நாளையே புறப்பட்டுப் பாண்டி யனைக் கண்டு குதிரைகள் வருமென்று கூறி அமைதி பெற் றிருக்க' எனக் கூறினன். அதற்குள் பெருந்துறைக் கோயிலின் திருப்பணியும் முடிவுற்றிருக்கலாம். இல்லையானல் அவர் புறப்பட்டிருக்கமாட்டார். இறைவன் ஆணையின்படியே பாண்டியநாட்டுத் தலைநகர் வந்து மன்னனிடம் குதிரைகள் விரைவில் வரும் எனக் கூறி வீடுசென்ருர். அவர் ப்ொருளெல் லாம் தமக்குக் கிடைக்காத வகையில் கோயிலுக்குச் செல விட்டாரே என்று வாட்டமுற்ற அவர்தம் சுற்றத்தார், மேலும் வஞ்சகர்களைக் காட்டிக் கொடுக்காது தாமே பழியை ஏற்றுக்கொண்டு, குதிரை வருவதாக மன்னனிடம் கூறிக்