பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பணத்தேவை உள்ள எழுத்தாளர், ஒரே நாவலை, கதாநாயகி பெயரில் புத்தகமாக வெளியிட ஒரு பதிப்பகத்திலும், நாவலின் பெயரோடு, அல்லது வேறொரு பெயரை ைவ த் து, புத்தகமாக்கும்படி இன்னொரு பதிப்பகத்திலும் விற்று வி டு வ து ம் சகஜமாக இருந்தது.

புத்தகங்கள் வெளிவந்ததும், நாவல் ரசிகர்கள் தங்கள் அபிமான ஆசிரியரின் புதிய புத்தகங்கள் வந்திருப்பதாக நம்பி, இரண்டையும் வாங்கிப் படித்துப் பார்த்த பின், இரண்டும் ஒன்றே எனக் கண்டு ஏமாறுவதும் சகஜமாயிற்று.

அயல் நாட்டுப் பொருள் உதவித் திட்டத்தின் கீழ் மொழி பெயர்ப்பு நூல்களை வெளியிட முன்வந்த பதிப்பாளர்களில் சில பேர், அதிக லாபம் பெற ஆசைப் பட்டு, திறமை இல்லாத சாதாரண எழுத்தாளரிடம் மொழி பெயர்ப்பை ஒப்படைப்பது இயல்பாக அமைந்தது. திறமையுள்ள, புகழ் வாய்ந்த, எழுத்தாளருக்கு, அதிகமான பணம் கொடுக்க வேண்டியிருக்கும்; புதிய, இளைய, எழுத்தாளருக்கு ஏதோ கொஞ்சம் கொடுத்தால் போதுமே!

இதனால் பல நல்ல நூல்களின் தமிழாக்கம் தரம் குறைந்ததாக இருந்தது. வாசகருக்கு சலிப்புத் தருவதாக அமைந்தது.

தென் இந்திய மொழிகளின் புத்தகங்களை தமிழில் பிரசுரிப்பதற்கென்று ஸ்தர்ன் லேங்குவேஜஸ் புக் ட்ரஸ்ட் என்றொரு அமைப்பு, அரசு நிதி

இ வாசகர்களும் விமர்சகர்களும் 90