பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உதவியுடன், தோன்றிச் செயல்பட்டது. அது வெளியிட்ட மொழி பெயர்ப்பு நூல்கள் பெரும்பாலும் சரளமான நடையில், வாசகர்களுக்கு படிக்க வேண்டும் எனும் ஆசையை உண்டாக்குகிற விதத்தில் தமிழாக்கப்பட வில்லை. பக்கத்துக்குப் பக்கம் இவை மொழி பெயர்ப்பு' என்று உறுத்தும் விதத்தில் அவை தமிழாக்கப்பட்டிருந்தன. இயல்பான ஒட்டத்துடன் இனிய தமிழில் மொழிபெயர்க்கப் பட்டிராத புத்தகங்கள் வாசகர்களின் மதிப்பையும்

ஆதரவையும் பெறாமலே போயின.

1960 களிலும் 70 களிலும், சாகித்திய அகாடமியும், நேஷனல் புக் ட்ரஸ்ட் என்ற அமைப்பும் மொழி பெயர்ப்பு நூல்களை நிறையவே வெளியிட்டிருக்கின்றன. இதர இந்திய மொழிகளில் உள்ள பெயர் பெற்ற படைப் பாளிகளின் நாவல்களை தமிழில் மொழி பெயர்த்து வெளியிடும் பணியையும் இவை செய்கின்றன.

இந்தத் திட்டத்தின்படி பல நல்ல நாவல்கள் தமிழாக்கப்பட்டுள்ளன. அநேக சாதாரண நாவல்களும் மொழி பெயர்க்கப்பட்டிருக்கின்றன. இவை போதிய கவனிப்பையும் வரவேற்பையும் பெறாமலே போயின.

மொழி பெயர்க்கப்பட்டுள்ள நல்ல நாவல்கள் உரிய முறையில் வாசகர்களின் கவனத்துக்குக் கொண்டு வரப்படாதது முக்கிய குறைபாடு ஆகும். பத்திரிகை களில் அவை பற்றி எழுதப்பட்டதில்லை. நூலகங்களில்

அவை வாங்கி வைக்கப்பட்டதும் இல்லை.

வாசகர்களும் விமர்சகர்களும் 91