பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பத்திரிகைகள், புத்தகங்கள் படிக்கிறவர்களில் பெரும்பாலோர் பொழுதுபோக்கிற்காகத் தான் அவற்றைப் படிக்கிறார்கள்.

அவர்களில் அதிகமான நபர்கள் கதைகள், துணுக்குகளைப் படிக்கிற போது அவற்றை எழுதியிருப்ப வர்கள் யார் எவர் என்று கூட அக்கறை காட்டுவதில்லை. ஏதோ கதை, படிப்பதற்குச் சுவையாக இருந்தால் சரி என்பது தான் அவர்களுடைய மனநிலையாக இருக்கிறது.

இப்படி படித்துப் படித்து அவர்களில் பெரும் பலருக்கு சில விதமான கதைகளின் மீது, சிலருடைய எழுத்துக்கள் பேரில், ஒரு தனிச் சுவை ஏற்பட்டு விடுகிறது.

அநேகமாக இந்த ஈடுபாடும் லயிப்பும் தொடர்

கதைகள் விஷயத்தில் தான் முக்கியமாக ஏற்படுகின்றன என்று சொல்ல வேண்டியிருக்கிறது.