பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதனாலேயே, பிரபலம் அடையாதவர்கள். பெயர் தெரியாதவர்கள், ஏதேதோ புனை பெயர்களில் எழுதுகிறவர்கள், இளைய எழுத்தாளர்கள், புதுசாக எழுதுகிறவர்கள் போன்றோரது கதைகளை ஜனரஞ்சகப் பத்திரிகைகள் பிரசுரிப்பதற்கு மனம் கொண்டாலும் கூட, தொடர்கதைகள் எழுதுவதற்கு புகழ் பெற்ற ஸ்டார் எழுத்தாளர்களை மட்டுமே அவை நாடுகின்றன.

சில எழுத்தாளர்கள் எழுதுகிற தொட ர்கதைகள் பத்திரிகை வாசகர்களுக்கு வெகுவாகப் பிடித்துப் போகின்றன. தொடர்ந்து அவ் எழுத்தாளர்களின் தொடர்கதைகளை அவர்கள் அலுக்காமல் படிக்கிறார்கள்.

உடனே வணிக நோக்குப் பத்திரிகைகள் போட்டி போட்டுக் கொண்டு அவ் எழுத்தாளர்களின் எழுத்துக் களை வாங்கிப் பிரசுரிக்கின்றன. பத்திரிகைகளில் தொடர்கதை முடிவுற்ற உடனேயே, அதைப் புத்தகமாக வெளியிடுவதற்கு பதிப்பகத்தார் தயாராக இருக்கிறார்,

அப்படி வெளி வருகிற நாவலை வாங்கிப் படிப்பதற்கும் வாசகர்கள் இருக்கிறார்கள். புத்தகம் விரைவில் விற்பனையாவதிலிருந்து இது புரிய வருகிறது.

ஆயினும் எந்த ஒரு எழுத்தாளருக்கும் இது நீடித்த நிரந்தரமான, நிலையாக அமைவதில்லை. வாசகர்களின் அபிமானம் அல்லது மோகம், ஒரு கால கட்டத்திற்குத் தான் ஒரு எழுத்தாளர் மீது படிந்திருக்கிறது. பிறகு

இ வாசகர்களும் விமர்சகர்களும் 94