பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அது வேறு விதமான எழுத்துக்களை உருவாக்குகிற இன்னொருவர் மீது தாவி விடுகிறது.

அதற்கு ஏற்பவே எழுத்தாளருக்கும் புகழ் (கவனிப்பு) "சீசன்' நடைமுறையில் நிலவுகிறது. வாசகர்களின் ஆர்வம் வேறு திக்கில் பாயவும், முந்தியவரின் சீசன் மங்கிப் போகிறது. விரைவிலேயே வாசகர்கள் மத்தியில் அ ந் த எழுத்தாளருக்குக் கவனிப்பு இல்லாமல் போகிறது. அதை உணர்ந்த ஜனரஞ்சகப் பத்திரிகைக்காரர்கள் அவரை - அவர் எவ்வளவு பெரிய ஸ்டார் எழுத்தாளராக இருந்த போதிலும் - ஒதுக்கி வைத்து விடுகின்றன.

வாசகர்களின் டேஸ்ட் ஒரு வகை எழுத்தின் மீது ஏன் ஏற்படுகிறது; ஒரு உச்ச கட்டம் வரை போய் அது ஏன் சட்டென வேறொரு வித எழுத்தின் மீது படிகிறது; ஒரு எழுத்தாளரின் எழுத்துக்களை விரும்பிப் படித்துக் கொண்டே இருந்த வாசகர்கள் மெது மெதுவாக அவரை ஏன் ஒதுக்கி வைத்து விடுகிறார்கள். இத்தயை விஷயங்களை எவரும் ஆய்வு செய்யவில்லை.

எந்த ஆய்வு மாணவராவது இவற்றை எல்லாம் ஆராய்ச்சிப் பொருளாக்கி உழைத்தால், ரசமான சுவையான உண்மைகள் தெரியவரக் கூடும்.

பத்து வருடங்களுக்கு ஒரு முறை வாசகர்களின் ருசிகள் மாறுகின்றன என்று சொல்லலாம். ஏனெனில், பத்து வருடங்களில் வாசகர்களின் தலைமுறையே

இ வாசகர்களும் விமர்சகர்களும் 95