பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாறுகிறது என்று சொல்ல வேண்டும். முன்பு படித்துக் கொண்டிருந்தவர்கள் முதுமை பெற்று விடுகிறார்கள். புதிய வாசகர்கள் நிறையப் பேர் வந்து விடுகிறார்கள். அடுத்த பத்து வருடங்களில் இளையவர்கள் வேறு வித ருசி பேதங்கள் கொண்டவர்கள் - வாசகர்கள் ஆகிறார்கள். இப்படி மாறிக் கொண்டே போகிறது, அல்லது வளர்ந்து கொண்டே இருக்கிறது எனச் சொல்லலாம்.

இலக்கியம், சமூகம், மனிதர்கள் இயல்பு முதலிய பல விஷயங்களையும் கூர்ந்து நோக்கி விமர்சனம் செய்வதில் ஈடுபட்டிருந்த நண்பர் ஒருவர் ஒரு சமயம் இவ்விதம் கூறினார்.

பத்து வருடங்கள் என்று சும்மா ஒரு கணக்கிற்காகத் தானே தவிர, வரம்பிட்டு கட்டுப்படுத்துவதற்கில்லை.

வாசகர்களின் மோகம் ஒருவித எழுத்தின் மீது பதினைந்து, இருபது வருடங்கள் வரை என்று படிந்திருக்கவும் விடும்.

அபூர்வமாக, ஒரு சிலரது தொடர்கதை எழுத்துக்கள் எல்லாத் தலைமுறையினருக்கும் பிடித்துப் போகின்றன. எந்தக் காலத்திலும் வாசகர்கள் அந்த எழுத்தாளரின் தொடர்கதைகளை ஆசையோடு படிக்கத் தயாராக இருக்கிறார்கள் என்பதும் தெரிய வருகிறது.

பொதுவாக பார்க்கப் போனால், அந்த விமர்சக நண்பர் நோக்கு சரியானது தான் எனப் புரியும்.

இ வாசகர்களும் விமர்சகர்களும் 96