பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வந்தோர் மற்றும் பெரியவர்களும் படிப்பதில் விருப்பம் கொள்ளத் தூண்டியது 'கல்கண்டு.

அந்தப் பத்திரிகையில் தரப்பட்ட பல்சுவை விஷயங்களே இதற்குக் காரணம் ஆயின. ரசமான சிறுவர் கதைகள் மட்டுமே அதில் பிரசுரிக்கப்படவில்லை. சுவை யான துணுக்குகள், மக்களின் அறியும் அவாவை திருப்தி செய்யக் கூடிய பல விதமான தகவல்கள், அறிவியல் விஷயங்கள், பிறமொழிக் கதைகள், மர்மம் - திகில்துப்பறிதல் எல்லாம் நிறைந்த தொடர்கதைகள், ஆரோக்கியக் குறிப்புகள் முதலியன அதில் இடம் பெற்றன. எனவே, அதை பல தரத்தினரும் வரவேற்பது சாத்தியமாயிற்று.

சர்வ சாதாரண முறையில், எளிய நடையில், பல்சுவை விஷயங்களையும் தருகிற பத்திரிகைகளை வாசகர்கள் மகிழ்ச்சியுடன் ஆதரிக்கிறார்கள். இது எக்காலத்தும் நடைமுறை நிகழ்ச்சியாக இருந்து வருகிறது.

வீட்டு வைத்தியம், நாட்டு வைத்தியம், சோதிடக் குறிப்புகள், தன்னம்பிக்கை ஊட்டுகிற - சுயவளர்ச்சிக்கு வழிகாட்டுகிற கட்டுரைகள், கோயில்கள் திருத்தலங்கள் புண்ணியம் தேடித் தருகிற புனித இடங்கள் பற்றிய விவரிப்புகள் முதலியவற்றை விரும்பி, எதிர்பார்த்து, ஆர்வத்துடன் வரவேற்கிற வாசகர்கள் இந்த நாட்டில் மிக நிறையவே இருக்கிறார்கள்.

இ. வாசகர்களும் விமர்சகர்களும் 162