பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இப்படி அந்த நண்பர் ஒரு சமயம் தெரிவித்தார். இது 1960 களில்.

அதன் பிறகும் நிலைமை பகுத்தறிவு ஒளி ஏற்று மாறுதல் பெற்றுவிடவில்லை.

சோதிட மோகம் வாசகர்களிடம் அதிகமாக

வளர்ந்துள்ளது என்று சொல்ல வேண்டும்.

சோதிடத்துக்கென்றே பலவிதமான பத்திரிகைகள்தாள்களாகவும் புத்தக வடிவத்திலும் - 1970 களில் அதிகம் அதிகமாக வந்து கொண்டிருந்தன.

இவற்றில் பல வெளியீடுகள் நின்று போயிருக்கலாம். எனினும், 1980 களிலும் சோதிடப் பத்திரிகைகள் பல வந்து கொண்டு தான் இருக்கின்றன. அவற்றை வாங்கி ஆர்வமாக கவனிக்கிற வாசகர்களும் நிறையவே இருக்கிறார்கள்.

மனிதர்கள் எதிர்காலம் பற்றிக் கன் ஷ் காண்கிறார்கள். வளமான எதிர்காலத்துக்கும், அதற்கு வகை செய்யக்கூடிய அதிர்ஷ்டத்துக்கும் ஆசைப் படுகிறார்கள். எண்ணங்கள் வளர்க்கிறார்கள். அவை எல்லாம் சித்திக்க வேண்டும் என விரும்புகிறார்கள். சித்திக்கும், எண்ணங்க்ள் முழுதுமாக இல்லாவிட்டாலும் அரைவாசி கால்வாசியாவது நிறைவேறும் என்று நம்பிக்கை ஊட்டுகிற ஆசை வ ர் த் ைத க ள் அவர்களுக்கு தெம்பு தருகின்றன. ராசி பலன்களும் சோதிடக் குறிப்புகளும் இந்த வேலையைச் செய்கின்றன.

இ வாசகர்களும் விமர்சகர்களும் 105