பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களுக்கு லாபகரமாகவே அமைந்தன. எளிதில் வாங்கிப் படிக்கக் கூடியனவாகவும் இருந்தன.

மலிவு விலைப் பதிப்புகளாக உயர்ந்த நூல்களை வெளியிட்டு ஒரு சாதனை புரிந்த ஒருவரைப் பற்றிக் குறிப்பிட வேண்டும். மர்ரே அன்ட் கம்பெனி ராஜம் என்பவர் தான் அவர்.

கம்ப ராமாயணம், சிலப்பதிகாரம், மணிமேகலை வில்லிபாரதம், புறநானூறு, அகநானூறு மற்றும் சங்கப் பாடல்கள் பலவற்றையும் தனித்தனிப் புத்தகங்களாக அச்சிட்டு விநியோகித்தார். கம்ப ராமாயணம் ஒவ்வொரு காண்டமும் தனித்தனியே வெளியிடப்பட்டது. ஆனால் எல்லா நூல்களின் மூலம்’ மட்டுமே தெளிவாக அச்சிடப்பட்டன. எந்த நூலுக்கும் 'உரை சேர்க்கப்படவில்லை.

பாராட்டுதலுக்கு உரிய இந்த இலக்கியப் பணியை,

ஒவ்வொரு நூலிலும் ஒரே ஒரு பதிப்பு வெளியிட்டதோடு அவர் நிறுத்திக் கொண்டார். அது வாசக உலகத்துக்கு நட்டம் தான்.

"ராணி முத்து பிரபல எழுத்தாளர்களின் பெயர் பெற்ற நாவல்களை ஒரு ரூபாய் புத்தகமாக வெளியிடவும், வாசக உலகம் மகிழ்ச்சியோடு வரவேற்று ஆதரித்ததில் வியப்பு எதுவும் இல்லை.

பல வருடங்களுக்குப் பிறகு, குமுதம் பத்திரிகை நிறுவனம் மாதம் ஒரு நாவல் வெளியிட முன் வந்தது. மாலைமதி வெளியீடு தோன்றியது.

இ வாசகர்களும் விமர்சகர்களும் 110