பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மற்றவர்களை - முக்கியமாக பிரபலமானவர்களை, உயர் பதவிகளில் இருப்பவர்களை, அரசியல் தலைவர் களை, ஆட்சியாளர்களை - கண்டித்தும், குறை கூறியும், கடுமையாக விமர்சித்தும், பரிகசித்தும், நையாண்டி பண்ணியும் எழுதுகிற எழுத்துக்களை வாசகர்களில் ஒருசாரார் விரும்பிப் படிக்கிறார்கள்.

இவ்விதமான எழுத்துக்களை கட்டுரைகளாகவும், செய்தி விமர்சனங்களாகவும், கார்ட்டூன்களாகவும், நாடகங்கள் கதைகள் தொடர்கதைகளாகவும் பிரசுரித்துக் கொண்டிருக்கிற பத்திரிகைகளுக்கு லட்சக்கணக்கில் வாசகர்கள் சேர்வதை அறிய முடிகிறது.

ஆளும் கட்சியையும் ஆட்சியாளர்களையும் பல்வேறு முறைகளில் கிண்டல் செய்தும், கடுமையாக விமர்சனம் பண்ணியும், நகைச்சுவையோடு அவர்களது குறை பாடுகளை எடுத்துக் கூறியும், வாசகர்கள் மத்தியில் தனித்த செல்வாக்கைப் பெற்றுள்ளது. சோவின் துக்ளக்'