பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எனவே சுதந்திர மடம் போல் விளங்கியது அந்த வீடு. நண்பர்கள் பலரும் இஷ்டத்துக்கு வந்தார்கள், போனார்கள். லீவு நாட்களில் பொழுது போவதற்காக, சீட்டு விளையாடினார்கள். சிலசமயம் 'வனபோசனம்’ (எக்ஸ்கர்ஷன்) என்று ஆற்றங்கரைக்குப் போய் விரும்பிய சிற்றுண்டி தயாரித்து சாப்பிட்டு மகிழ்ந்தார்கள்.

கிடைத்ததை எல்லாம் படித்தார்கள்.

படிப்பதற்கு நாவல்கள் நிறையவே. கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டதும், குறுகிய காலத்தில், துரிதமாக, மிக அதிகமான நாவல்களைப் படித்து முடிக்க வேண்டும் என்று திட்டம் தீட்டினார்கள்.

வட்டமாக அமர்ந்து, ஆளுக்கு இத்தனை பக்கங்கள் வாசிப்பது என முறை வைத்துப் படிப்பது. இதன் மூலம், படிப்பவருக்கும் அலுப்புத் தட்டாது; ஒரே சமயத்தில் ஒரு புத்தகத்தைப் பல பேர் படித்து கதையை தெரிந்து கொள்ளவும் முடியும். -

இத் த உத்தியை வெற்றிகரமாக அமுல் தடத்தினார்கள். வடுவூர் நாவல்கள் அனைத்தையும் படித்தான்கள். தொடர்ந்து, ஆரணி குப்புசாமி முதலியார், ஜே. ஆள். சங்கராஜு, வை. மு. கோதைநாயகி அம்மாள் தாவல்கள் சுவாரஸ்யமாக வாசித்து முடிக்கப்பட்டன.

சில நாட்களில் சாத்திரி 12 மணி 1 மணி வரைகூட இந்திப் படிப்பு நடைபெறும். முறை வைத்து வாசித்து, கதை கேட்டதனால் ரசனைச் சுவை குறையுமா?

ஒ வாசகர்களும் விமர்சகர்களும் 生平