பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்றும் கு. ப. ரா. கருதினார். இதை என்ன எழுதுவது?

என்ற கட்டுரையில் அவர் குறித்திருக்கிறார்.

பிற மொழிகளிலிருந்து கதைகளைத் தமிழில் தருகிற பொழுது, நேரடி மொழி பெயர்ப்பு நல்லதா: மூலக் கதையைத் தழுவித் தமிழில் சொந்தக் கதை போல் எழுதுவது உகந்ததா என்றொரு சர்ச்சையும் 1980 களில் படைப்பாளிகள் மத்தியில் நடைபெற்றது.

, மணிக்கொடி பத்திரிகையில் வெளிவந்த இந்த விவாதத்தில் முக்கிய எழுத்தாளர்கள் பலரும் கலந்து கொண்டார்கள். இவ் இலக்கிய விவாதம் படிப்பதற்கு சசமாக அமைந்திருந்தது. சூடாகவும் சுவையாகவும் வளர்ந்த அது விமர்சன ரீதியில் வளர்க்கப்படவில்லை.

மேலே குறிப்பிட்ட விவாதங்களில் புதுமைப் பித்தனும் உற்சாகத்துடன் கலந்து கொண்டார். 'மணிக்கொடி யில் அவர் புத்தக மதிப்புரைகளும் எழுதினார். அவற்றில் எல்லாம் நேரிய விமர்சகராக அவர் தன்னைக் காட்டிக் கொள்வதை விட பல சமயங்களில் கிண்டலாகவும் முரட்டடியாகவும் கருத்துக் களை உதிர்ப்பதில் தான் ஆர்வம் கொண்டிருந்தார் என்றே சொல்ல வேண்டும்.

விமர்சனம் என்று பின்னர் அவர் எழுதிய. வற்றிலும் தாக்குதலும் தடலடித்தனமுமே துக்கலாகத் தெரிந்தன. கல்கி யின் கதைகளை விமர்சிக்க முனைந்த அவர், கல்கியின் கதைகளில் எதுவும் உருப்படியானது அல்ல. சொந்தமாக எழுதப்பட்டவையும் இல்லை;

இ வாசகர்களும் விமர்சகர்களும், 盖40