பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்படி ஒரு பரபரப்பை ஏற்படுத்துவதற்காகவே மு. அருணாசலம் அது மாதிரி ஒரு புத்தகத்தை எழுதியிருந்திருக்கலாம். அது நேர்மையான ஆய்வோ, நடுநிலை விமர்சனமோ இல்லை.

அதே போல, அந்தப் புத்தகத்தை விமர்சித்தவர் களும் உணர்ச்சி வசப்பட்டும் ஆத்திரத்தோடும் கண்டனங்கள், தாக்குதல்கள், வசைபுராணங்களில் ஈடுபட்டார்களே தவிர, மு. அருணாசலத்தின் ஆராய்ச்சியின் குணங்களையும் குறைகளையும் நிதானமாக எடுத்துக் காட்டி, நேர்மையான முறையில் விமர்சிக்கவுமில்லை.

பண்டிதர்களும் பண்டித மனோபாவம் பெற்றவர் களும் மறுமலர்ச்சி எழுத்தாளர்களைக் குறை கூறுவதும், தாக்குவதும், மறுமலர்ச்சி எழுத்தாளர்கள், தமிழ் வளர்ச்சி குன்றி வளம் குறைந்து போனதற்குப் பண்டிதர்களும் அவர்களுடைய போக்குமே காரணம் என்று குற்றஞ்சாட்டித் தாக்குவதும் நெடுங்காலமாக வளர்ந்து வரும் ஒரு நடைமுறை ஆகிவிட்டது.

தமிழ் மொழிச் குப் பெருமை சேர்ப்பவை, தமிழை வாழ வைப்பவை கம்பராமாயணமும் திருக்குறளும் தான்; அவையே தமிழின் கதி என்று பண்டிதர்கள் திரும்பத் திரும்பச் சொல்வதும், பழம் பெருமை பேசிக் காலம் கழிப்பதுமே தமிழ்ப் பணியாகக் கருதப்பட்டு வந்தது. புதுமையைப் பழித்தார்கள் அவர்கள்.

ரா. பி. சேதுப்பிள்ளை போன்ற பண்டிதர் அல்லாத தமிழ் அறிஞர்கள் கூட நவீன எழுத்தையும்

இ வாசகர்களும் விமர்சகர்களும் 143