பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"இலக்கிய வட்டம்' என்றொரு பத்திரிகையை க. நா. சு. சிறிது காலம் நடத்தினார். இதற்குள் அவர் விமர்சகர் என்ற முறையில் கண்டனங்களுக்கும் குறை கூறல்களுக்கும், ஒரளவு பாராட்டுதலுக்கும் ஆளாகி

விட்டார்.

அதற்கு அவருடைய விமர்சன முறையே காரணம் ஆகும். க. நா. சு. படைப்பாளி என்ற தன்மையில் சில நல்ல நாவல்களை எழுதியுள்ளார். 'பொய்த்தேவு”, "ஒரு நாள் என்ற இரண்டு நாவல்களும் குறிப்பிடத் தக்கவை. அவர் பல சிறுகதைகளும் எழுதியிருக்கிறார். அவை சிலர்ால் மட்டுமே பாராட்டப்படும் தன்மையில்

உள்ளன.

இலக்கிய விமர்சனத்தில், பத்திரிகை எழுத்துக்கும் தரமான எழுத்துக்குமிடையே காணப்படுகிற பெரும் வித்தியாசத்தை க. நா. சு. சுட்டிக் காட்டினார். சிறுகதை எழுதுகிறவர்களில் நன்றாக, தரமாக எழுதியிருப்பவர்கள்எழுதக்கூடியவர்கள் - ஒரு சிலர் தான் என்று பட்டியல் போட்டுக் காட்டினார். மற்றவர்களின் எழுத்துக்க்ள் எல்லாம் பிரயோசனமில்லாதவை என்று சொன்னார்.

க. நா. சு. நிறையப் படித்தவர். உலக இலக்கியப் பரிச்சயம் அதிகம் உடையவர். இலக்கிய ரசிகர் என்ற முறையில், தனது ரசனையையே உரைகல்லாகக் கொண்டு தமிழில் வெளிவந்திருப்பவற்றை எல்லாம். விமர்சிப்பதாக அவர் சொன்னார். புத்தகங்களையோ, பிறர் எழுத்துக்களையோ, மதிப்பீடு செய்து சொன்ன

இ வாசகர்களும் விமர்சகர்களும் 154