பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கையாண்டார். அவருக்கு அளவுக்கு மீறிய புகழ்ச்சியை இலக்கியவாதிகள் சிலர் கொடுக்கிறார்கள்.

எனவே மெளனி வழிபாட்டை விமர்சித்து "எழுத்து பத்திரிகையில் சிலர் கட்டுரையும் கடிதங்களும் எழுதினார்கள்.

"எழுத்து விமர்சனத்துக்காக ஆரம்பிக்கப்பட்ட போதிலும், எதிர்பாராத விதத்தில் அது புதுக்கவிதை வளர்ந்து வளம் பெறுவதற்கான அரங்கமாகக் செயல்பட நேரிட்டது வரலாறு ஆகும். - எனினும், விமர்சனத் துறையிலும் எழுத்து வின் சாதனைகள் பெருமைக்கு உரியன என்பதில் சந்தேகமில்லை.

க. நா. சுப்ரமண்யத்தின் விமர்சன முறை மேம்போக்கானது; வெறுமனே அபிப்பிராயங்களை உதிர்த்துச் செல்வது; சொந்த ரசனையின் அடிப்படையில் சொல்லப்படுவது.

ஆனால், சி. சு. செல்லப்பாவின் விமர்சன முறை ஆழமானது; ஆய்வு ரீதியானது; காரண காரியங்களுடன் விரிவாக விளக்கிச் சொல்லி முடிவுக்கு வருவது. ‘அனலிட்டிக்கல் கிரிட்டிலிகம். என்ற வகையைச் சேர்ந்தது.

இவ்வகையில் அவர் மெளனியின் மனக்கோலம்’ என்று, மெளனி கதைகளை ஆராய்ந்தும், புதுமைப் பித்தன் கதைக்கரு' "ராமாமிர்தத்தின் கதைக் கலை’ என்றும் எழுதிய நீண்ட கட்டுரைகள் மூக்கியமானவை, புதுக்கவிதை பற்றியும் பல பயனுள்ள விமர்சனக்

விமர்சகர்களும் 157

இ வாசகர்களும்