பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெற்றிருந்தது. 'சுதேசமித்திரன்’ சில சில ஜில்லாக்களில் அதிகம் விற்பனையாகிக் கொண்டிருந்தது.

பாரதி பக்தரும், பாரதியாரால் தம்பி’ என்று. அழைக்கப்பட்ட பெருமையைப் பெற்றிருந்தவருமான பரலி சு. ந்ெல்லைப்பர் லோகோபகாரி வார இதழை நடத்தி வந்தார். செய்திகள், தகவல்களோடு கட்டுரை கருத்துரைகளையும் அது வழங்கி வந்தது.

அறிஞர் திரு. வி. க. வின் நவசக்தி பத்திரிகையும், தமிழ் அன்பர் சொ. முருகப்பாவின் 'குமரன்”, ராய.சொக்கலிங்கத்தின் ஊழியன் ஆகிய வார இதழ்களும் வாசகர்களின் அறியும் அவா, தகவல் தினவு, அறிவுப்பசி, தமிழ் உணர்வு முதலியவற்றுக்கு அந்தக் காலத்திய நியதி களின்படி, போதுமான தீனி அளித்து வந்தன.

இந்திய நாடு முழுவதுமே உணர்வு விழிப்பு ஏற்பட்டு வந்த காலம் அது. தேசீய விடுதலைப் போராட்ட உணர்ச்சி தீவிரம் பெற்றுக் கொண்டிருந்த நேரம்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பு காந்திஜீயிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அவர் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சுற்றுப் பயணம் செய்து, தமது ஆத்மீக சக்தியால் மக்களை உணர்வு பெற்று விழித்தெழச் செய்து கொண்டிருந்தார். தமது பேச்சுக்கள் மூலமும் எழுத்துக்கள் மூலமும் நாட்டில் புத்துயிர்ப்பும் புதிய வேகமும் பரப்பினார் அவர். "மண்ணாகக் கிடந்த மக்களுக்கு உணர்வூட்டி அவர்களை மனிதர்களாக மாற்றிய பெருமை மகாத்மா காந்திக்கு

வாசகர்களும் விமர்சகர்களும் 11