பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அக்காலத்தில் புத்தக வெளியீட்டகங்கள் வாசகர்களை நம்பித்தான் புத்தகங்களைத் தயாரித்து வெளியிட்டன. மொத்தமாக - பல நூற்றுக்கணக்கில் புத்தகங்களுக்கு ஆர்டர் பண்ணுகிற நூலக ஆணைக்குழு அப்போது ஏற்பட்டிருக்கவில்லை.

புத்தகங்களைத் தேடி வாங்கிப் படிக்கக் கூடிய தனிநபர்களின் எண்ணிக்கை கணிசமாகவே இருந்தது. பத்திரிகைகளில் வருகிற 'மதிப்புரை களைப் பார்த்தும், படித்த நண்பர்கள் மூலம் அறிய நேர்ந்தும், பலப்பல ஊர்களிலும் இருந்த புத்தகப்பிரியர்கள் நூல்களை

வாங்கிப் படித்தார்கள்.

1940 களில் பெயர்பெற்று விளங்கிய பிரசுராலயங் களில் சக்தி காரியாலயம்’ என்பதும் ஒன்று. அதன் அதிபர் வை. கோவிந்தன், பின்வந்த புத்தக வெளியீட்டாளர்கள் அநேகருக்கு முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும் திகழ்ந்தவர். இலக்கியத்தரமான நூல்கள், அறிவு புகட்டும் சிந்தனை வெளியீடுகள், நல்ல மொழிபெயர்ப்புப் புத்தகங்கள் முதலியவற்றை நியாயமான விலையில் வெளியிட வேண்டும், வாசகர்கள் பயனடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் அவர் பிரசுரத் துறையில்

ஈடுபட்டார்.

அந்நாட்களில், பெங்குவின் புக்ஸ் பெலிக்கன் வெளியீடுகள்' என்று பிரிட்டனிலிருந்து வெகு தரமான புத்தகங்கள், மிகக் குறைந்த விலையில் (அக்கால நாணய முறையில் ஆறு அணா) வந்து கொண்டிருந்தன.

இ வாசகர்களும் விமர்சகர்களும் 46