பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

} வருடங்கள் வரையில் 33». Η-- பாரதியார் கவிதைகள் நாட்டு மக்களிடையே நல்ல வரவேற்பையும் கவனிப்பையும் பெற முடிந்ததில்லை என்பது ஏற்கனவே

சொல்லப்பட்டிருக்கிறது.

ஆனால், பாரதி வழி வந்த கவிஞர் பாரதிதாசன், வளர்ந்து கொண்டிருந்த சமூக சீர்திருத்தக் கட்சியைச் சார்ந்திருந்ததால், குறுகிய காலத்தில் வெகுவேகமான கவனிப்பையும். போற்றுதலையும் பெறுவது சாத்தியமாக இருந்தது.

"பார்திதாசன் கவிதைகள்' என்ற முதல் தொகுதி, பகுத்தறிவுக் கட்சியைச் சேர்ந்த தனிநபர் ஒருவரால் வெளியிடப்பட்டது. அது மெதுமெதுவாக விற்பனை ஆயிற்று. இரண்டாவது பதிப்பு. கட்சி நூல்களை வெளியிட்ட பதிப்பகத்தின் பிரசுரமாக வந்து நல்ல வரவேற்பைப் பெற்றது.

பின்னர் பாரதிதாசன் நூல்களை வெளியிடு. வதற்கென்றே தனிப் பதிப்பகம் ஒன்று தோன்றியது. அதன் வாயிலாக பாரதிதாசன் எழுத்துக்கள் பலவும் அழகான புத்தகங்களாகப் பிரசுர்ம் பெற்றன. அவை எல்லாம் வாசகர்களின் ஆதரவை எளிதில் பெற்றன,

தமிழில் முதன் முதலாக, ஒரு கவிதைத் தொகுப்பு பல பதிப்புகளைப் பெற முடிந்தது என்ற பெருமை 'பாரதிதாசன் கவிதைகள் தொகுப்புக்கே உரியது.

இந்த சாதனை 1940களில் நிகழ்ந்தது. பாரதிதாசன் கவிதைகளுக்கு ரசிகர்கள் அதிகரித்தது

வாசகர்களும் விமர்சகர்களும் 52