பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர்வத்தினாலும் ஆசையோடும், வெவ்வேறு இடங்களில், சில தனி நபர்கள் சிறு அளவில் பத்திரிகை நடத்துவதும் சகஜமாக இருந்தது. குடிசைத் தொழில் போல் நடந்த இச்சிறு பத்திரிகைகளுக்கு அவற்றுக்கெனத் தனித்தனிக் குழுக்கள் போல, குறைந்த அளவு வாசகர்கள் இருந்தார்கள்.

அவர்களில் பலர் எழுத்துலகில் அடி எடுத்து வைத்து முன்னேறத் துடித்த இளைஞர்களாவர். இத்தகைய பத்திரிகைகள் அவர்களுடைய எழுத்துக்களை மகிழ்ச்சியோடு வெளியிட்டதால், அவை இளம் எழுத்தாளர்களுக்கு உதவுகிற பயிற்சித்தளம் போல் விளங்கின.

நாரண துரைக்கண்ணனை ஆ. சி ரி ய ர க க் கொண்டிருந்த பிரசண்ட விகடன்' என்ற மாதமிரு முறைப் பத்திரிகையும் இப்படிப்பட்ட இதழாக இருந்தது. புதிதாக எழுதத் தொடங்கிய இளையவர்களுக்கு அவர் ஊக்கம் கொடுத்தார். சுமாரான கதைகளாக இருப்பினும் அவற்றை அவர் வெளியிட்டு இளம் எழுத்தாளர்களுக்கு உற்சாகம் தந்தார்.

பிரசண்ட விகடன் சில ஆயிரம் வாசகர்களைப் பெற்றிருந்தது. அது பரவலான கவனிப்பையும், வாசகர்களது உற்சாகமான பாராட்டுதலையும் குறை கூறல்களையும் பெறுகிற விதத்தில், சினிமா ப ற் றி நேயர்கள் விமர்சனம் வெளியிடத் துணிந்தது.

வெவ்வேறு ஊர்களிலிருந்த வாசக நேயர்கள், அவ்வப்போது திரையிடப்பட்ட புதிய படங்கள் பற்றி

இ வாசகர்களும் விமர்சகர்களும் 59