பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'ெசகர்களில் மிகப்பலரை தொடர்கதைகன் ஈர்க்கின்றன.

பெண்கள் தான் தொடர்கதைகளை அதிகம் விரும்பிப் படிப்பவர்கள் என்று பொதுவாகச் சொல்லப் படுவது உண்டு. இது மிகைப்படுத்திச் சொல்வதாகும்.

ஆண்களிலும் பெரும்பலர் பத்திரிகைகளில் வருகிற தொடர்கதைகளை ஆர்வத்தோடு படிக்கிறார்கள். ஆவலோடு அடுத்த பகுதியை எதிர்பார்க்கிறார்கள். ஒரு கதை முடிவுற்றதும், ஆசையோடு கதை முழுவதையும் சேகரித்து புத்தகம் போல் பைண்டு செய்து வைத்துக் கொள்கிறார்கள். மீண்டும் வசதிப்படுகிற போது மொத்தமாகப் படித்து மகிழ்வதற்காகவும், படிக்க விரும்புகிறவர்களுக்கு இரவல் கொடுப்பதற்காகவும் தான்.

பத்திரிகைகளில் தொடர்கதை பிரசுரிக்கும் வழக்கம் எப்போது நடைமுறைக்கு வந்தது?