பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரித்திரம் நாவலை முடித்து முத்து மீனாட்சி என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டார்.

அதன் பிறகு, கால ஓட்டத்தில் பத்திரிகைகளில் தொடர்கதை என்பது சர்வ சகஜ விஷயமாக - கட்டாயம் இருந்தே தீர வேண்டிய ஒரு அம்சமாக - ஆகிவிட்டது.

தொடர்கதையை, பத்திரிகையின் விற்பனை அதிகரிப்பதற்கு ஏற்ற ஒரு சாதனமாக - வலிய சக்தியாக - கையாண்டு வெற்றி கண்டவர் கல்கி' என்ற புனை பெயரில் எழுதிய ரா. கிருஷ்ணமூர்த்தியே ஆவார்.

1930 களில் கல்கி முதன்முதலாக எழுதிய சமூக நாவல் ஆனந்த விகடனில் தொடர்கதையாக வந்த போது, வாசகர்கள் அடைந்த பரபரப்பையும், அதற்கு அவர்கள் அளித்த வரவேற்பையும் பற்றி நான் மூன் பகுதியில் குறிப்பிட்டிருக்கிறேன். அடுத்து விகடன் பத்திரிகையில் வெளி வந்த கல்கியின் தொடர்கதை "தியாக பூமி’ வாசகர்களைக் கவர்ந்த தன்மை குறித்தும் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.

பின்னர், தொடர்கதை வரலாற்றில் அடுத்த சாதனையாக கல்கி கையாண்டது சரித்திர நாவல்’ ஆகும்.

காலம் ஆனந்த விகடனையும் கல்கியையும் பிரித்து விட்டது. விகடனைத் துறந்து வெளி வந்த ரா. கிருஷ்ணமூர்த்தி கல்கி' என்ற பத்திரிகையை

இ வாசகர்களும் விமர்சகர்களும் 等9