பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

“பொம்மையா, மனைவியா? என்ற பெயரில் தமிழில் தந்தார்.

பெயர் பெற்ற உலக நாவல்கள் பலவற்றை க. நா. சு. தமிழாக்கித் தந்தார். அவற்றைப் படித்து ரசிப்பதற்கு வாசகர்கள் இல்லாமல் போகவில்லை.

ஒவ்வொரு பதிப்பகமும் மொழிபெயர்ப்பு நூல் களையும் வெளியிட்டன. சர்வ தேசக் கதை மலர்கள்’ என்ற வரிசையில், ஒவ்வொரு நாட்டின் சிறுகதைகளும், பிரபல எழுத்தாளர்களால் மொழிபெயர்க்கப்பட்டு, சின்னச் சின்ன புத்தகங்களாகப் பிரசுரம் பெற்றன.

அ. கி. ஜயராமன் என்ற எழுத்தாளர் நடத்திய "ஜோதி நிலையம் இந்தப் பணியில் ஈடுபட்டிருந்தது. அவர் சரத் சந்திரர் நாவல்களைத் தமிழாக்கி நல்ல பெயர் பெற்றிகுந்தார்.

சொந்தமாக நாவல்கள் எழுதி வெற்றி கண்டிருந்த ஆர். சண்முக சுந்தரமும் சரத் சத்திரர் நாவல்களை மொழி பெயர்த்தார். 1940 களிலும் 50 களிலும் அவை: வெவ்வேறு பதிப்பகங்களால் வெளியிடப்பட்டன.

பிரெஞ்சு எழுத்தாளர் மாப்பசான் சிறு கதைகளும், பால்ஸாக் நாவல்கள் சிலவும் தமிழில் வந்தன.

ரஷ்யப் படைப்பாளிகள் டால்ஸ்டாய், செகாவ், புஷ்கின் ஆகியோரது படைப்புகள் மொழி பெயர்ப்புகளாக வத்தன. ரஷ்ய இலக்கியத்துக்கு நல்ல வரவேற்பு

வாசகர்களும் விமர்சகர்களும் 88.