பக்கம்:வாடா மல்லி.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Viii

விளக்கினார். இந்த ‘கண்ணாம்பூச்சி ஆட்டத்தில் அலிகள் அரவான்களாக இருக்கலாம் என்று கருத்து தெரிவித்தார். இந்தச் சமயத்தில் எனது உறவினர் திரு. வைகுண்டம் மேலும் பல வித்தியாசமான அலிகளோடு என்னைப் பேட்டி காணச் செய்தார்.

தினமலரின் தலைமை செய்தியாளர் திரு. நூருல்லா, அலிகள் பற்றி தாம் எழுதிய ஒரு புத்தகத்தை எனக்குத் தந்து உதவினார். அதோடு அவர்களைப்பற்றி தனக்குத் தெரிந்த விவரங்களையும் எடுத்துரைத்தார்.

நான் டெல்லியில் பல ஆண்டுகள் வாழ்ந்தது இந்த நாவலுக்கு வலுவூட்டியிருக்கிறது. இவர்களை மனிதப் பிறவிகள் என்று முதன் முதலில் அங்கீகரித்த தலைவர் அன்னை இந்திராகாந்தி என்று டெல்லி அலிகள் மூல மாகவே கேள்விப்பட்டேன். இவர்களுக்குக் குடியிருப்புக் களைக் கட்டிக் கொடுத்தவரும் அன்னை இந்திராவே!

இவர்கள் டெல்லியில் பல வீடுகளின் முன்னால் ஆடிப்பாடுவதை பல தடவை நான் பார்த்திருக்கிறேன். ஆகையால் அன்னை இந்திரா சுடப்பட்டபோது, நன்றி விசுவாசத்துக்கு முதலிடம் கொடுக்கும் இந்த அலிகள், கூட்டங்கட்டமாகக் கூடி பாடி அழுததையும், அன்னை இந்திராவின் கொலையை அடுத்து டெல்லியில் நடைபெற்ற கொடுரமான கலவரங்களின்போது, இந்த அலிகள் பல மனித உயிர்களைக் காப்பாற்றிய முயற்சிகளையும் நேரில் பார்த்த எனது டெல்லி நண்பர்கள் மூலம் நான் கேள்விப்பட்டேன். அலிகளின் மனிதநேயத்திற்கு இந்த நிகழ்ச்சிகளை ஒரு உரைகல்லாக இந்நாவலில் சித்திரித் திருக்கிறேன்.

இந்தப் பின்னணியில், நாவலுக்கான நான்கு அத்தியாயங்களை எழுதிவிட்டேன். திடீரென்று ஒரு எண்ணம் ஏற்பட்டது. இது வெறுமனே ஒரு நாவலாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/10&oldid=1248934" இலிருந்து மீள்விக்கப்பட்டது