பக்கம்:வாடா மல்லி.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி 79


பயல்கள் ஜட்டிகளோடுகூட வந்தார்கள். சுயம்புவைப் பார்த்தார்கள். அவன் கைகால்கள் இழுத்தன. நாக்கு, வாய்க்கு வெளியேயும், உள்ளேயுமாய்ப் புரண்டு கொண்டிருந்தது. மேல் உதடும் கீழ் உதடும் ஒன்றை ஒன்று நெருக்கின. பற்களுக்கு இடையே அவன் நாக்கு வெட்டி எடுக்கப் போவது போன்ற நெருக்கம். கண்கள் சொருகின. தலை உருண்டது. அவனால் இப்போது கூச்சலிட முடியவில்லை. ஆனாலும் ஏதோ ஒரு சப்தம். பூனையின் கால் நகங்களில் சிக்கிய அணில் மாதிரியான அவலச் சத்தம்.

மூர்த்தியும், முத்துவும், சுயம்புவின் தலையையும் கால் களையும் பிடித்துத் தூக்க, மற்றவர்கள் அவன் முதுகுக் குள்ளும், பின்பக்கமும் கைகளைச் சொருகினார்கள். சுயம்பு கூச்சப்பட்டு நெளிவது போலிருந்தது. பிறகு அந்த நெளிவே, நிமிர முடியாமல் திண்டாடியது. கால் கைகள் அங்கு மிங்குமாய் வெட்டி வெட்டி அவனைச் சுமந்தவர்களின் முகங்களில் ரத்தச் சுவடுகளை ஏற்படுத்தின.

சுயம்பு கீழே கொண்டு வரப்பட்டான். அநேகமாய் பிழைக்கமாட்டான் என்ற அச்சம். எங்கே போவது? டவுனில் எந்த டாக்டரும் இருக்கமாட்டார். டாக்டர் வீட்டைக் கண்டுபிடிக்கும் முன்பே உயிர் கண்டுபிடிக்க முடியாத இடத்திற்குப் போய்விடலாம். மூர்த்திதான் தட்டுத் தடுமாறிச் சொன்னான்.

‘மெடிகல் காலேஜ் ஹாஸ்டலுக்குப் போகலாம்.”

“முடியாது. அவ்வளவு பேசிட்டு எந்த முகத்தோட போறது.”

“அப்போ உங்க சுயமரியாதைக்காக இவனை இங்கேயே சாக விடுறதா?”

மாணவர்களின் வாதப் பிரதிவாதங்களுக்கு இடையே சுயம்பு மருத்துவ மாணவர் விடுதிக்குக் கொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/101&oldid=1249266" இலிருந்து மீள்விக்கப்பட்டது