பக்கம்:வாடா மல்லி.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 சு. சமுத்திரம்


போகப்பட்டான். அங்கே அதட்டிய வாட்ச்மேனை பல குரல்கள் அதட்டின. உடனே அவன் பயந்துபோய் விடுதி மாணவர் செயலாளர் டேவிட்டின் அறையைக் காட்டினான். கூடப் போக உதறல்.

டேவிட் அறை முன்னால், சுயம்புவைத் தரையில் கிடத்தினார்கள். மாணவர்களின் கூச்சலில், டேவிட் கதவு தட்டப்படாமலேயே வெளியே வந்தான். துள்ளத்துடிக்கக் கிடந்தவனைப் பார்த்துக் குனிந்து நாடி பிடித்தபடியே கேட்டான்.

“எப்படி இது. ஏதாவது மருந்து கொடுத்தீங்களா..” “நீங்க சொன்னது மாதிரி டாக்டர்கிட்ட கூட்டிப் போனோம். டிரான்குலை'சர்னு எழுதிக் கொடுத்தார். நைட்ல ஒண்ணுதான் கொடுக்கச் சொன்னார். நாங்க இவன் அதிகமா உளறுறான்னு கூட ஒரே ஒரு மாத்திரை யைத்தான் போட்டோம். இப்படி ஆயிட்டான்.”

“நாங்க எப்படி என்ஜினியராகக்கூடாதோ, அப்படி நீங்களும் டாக்டராகக் கூடாது. ஒரு மாத்திரையையே தாங்க முடியாது. இதுல வேற ரெண்டா. கவலைப் படாதீங்க. ஆளு சாகப்போறது மாதிரி அந்த மாத்திரை அடம் பிடிக்கும். வெறும் மிரட்டல்தான். நாம சண்டை போட்டோமே, அப்படி ஒரு பொய்ச் சண்டை. சரி, சரி பிரிஸ்கிரிப்ஷனை எங்கே. ஏன் அப்படி கைய விரிக்கீங்க. போய்க் கொண்டு வாங்க. நான் கீழே டிஸ்பென்சரிக்குப் போறேன். அங்க கொண்டு வந்துடுங்க. இவர் இங்கய இருக்கட்டும்.”

சுயம்புவை அங்கே கூடிய மருத்துவ மாணவர்களிடம் ஒப்படைத்துவிட்டு சக பொறியியல் மாணவர்களையும் அங்கேயே நிற்கும்படி கையாட்டிவிட்டு, மூர்த்தியும் முத்துவும், கீழே இறங்கித் தங்களது அறையைப் பார்த்து ஒடினார்கள். டேவிட்டும் அறைக்குள் போய் ஒரு சாவியை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/102&oldid=1249244" இலிருந்து மீள்விக்கப்பட்டது