பக்கம்:வாடா மல்லி.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 சு. சமுத்திரம்


கணக்கில் துண்டுப்பிரசுரம் அச்சடித்திருந்தார்கள். பொதுவாக, மாணவர்கள் கட்சிவாரியாக அணிபிரிந் திருந்தார்கள். தி.மு.க, அ.தி.மு.க மாணவர்கள் யாருக்கு வாக்களிப்பது என்று தீர்மானித்துவிட்டார்களாம். ஒப்புக்கு கதர்க் கைக்குட்டை வைத்திருந்த மாணவர்கள்தான், டில்லிக்கு டிரங்கால் போட்டிருக்கிறார்களாம். அநேகமாக வாக்குப்பதிவு முடிந்த ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று ஆணை வந்துவிடுமாம்!

அத்தனை போஸ்டர்களிலும் பல்வேறு வாக் குறுதிகள். இட்டிலியின் முப்பரிமாணங்களையும் கூட்டப் போவதாய் கொள்கை முழக்கம். ஆயிரம் உண்டிங்கு ஜாதி, ஆயினும் போலீஸ் வர என்ன நீதி’ என்ற கவித்துவ வரிகள். ‘தனி ஒருவனுக்கு பாஸ் இல்லையென்றால், கல்லூரியை எரித்திடுவோம்’ என்ற அர்த்தத்திலான வீர கோஷங்கள். பாட நேரத்தைப் பாதிநேரமாய் குறைக்கப் போவதாய் ஒரு சூளுரை. வகுப்பிற்கு இத்தனை நாட்களுக்கு வந்தால்தான் பரீட்சை எழுத முடியும் என்ற கண்மூடிப் பழக்கத்தை மண்மூடச் செய்யப் போவதாக வாக்குறுதி. இன்னும் ஒன்றில், விலைவாசியைக் குறைக்கப் போவதாகவும், ஒரு சபதம். இந்தியா முழுமைக்குமா, தமிழகத்தில் மட்டுமா என்பது புரியவில்லை. சம்பந்தப்பட்டவர்களிடம் விளக்கம் கேட்டால், அந்தக் கல்லூரி இருக்கும் ஊருக்குக் கும்பல் கும்பலாய்ச் சென்று விலைவாசியைக் குறைத்து, அந்தப் புரட்சி இந்தியா முழுதும் காட்டுத் தீ போல் பற்றும் என்று மூக்கு வழியான விளக்கங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, தாய்மொழிக் கல்வி என்ற போர்வையில் தமிழைத் திணிக்க அனுமதியோம் என்று சூளுரை!

மாணவிகளும் சளைக்கவில்லை. மாணவர்களின் தோளுக்குத் தோளாய் இயங்கினார்கள். சில சீனியர் மாணவிகள், ஜூனியர் மாணவிகளை மொபட்டுகளில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/106&oldid=1249248" இலிருந்து மீள்விக்கப்பட்டது