பக்கம்:வாடா மல்லி.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி 85


வலுக்கட்டாயமாக ஏற்றினார்கள். இன்னும் சிலர், வாக்காளப் பெண்களை சைக்கிள் கேரியரில் உட்கள்ர வைத்துக்கொண்டு அந்த வெயிட்டை சீட்டிலிருந்து ஒட்டிக் கொண்டுபோக முடியாது என்பதால், வெறுமனே உருட்டிக்கொண்டு போனார்கள். பதவி என்றால் சும்மாவா?

ஆங்காங்கே கும்பல் கும்பலாய் மாணவர் கூட்டம். பேராசிரியர்கள் ஒதுங்கி நின்றும், உதவிப் பேராசிரியர்கள் ஒதுக்கப்பட்டும், அந்தத் தேர்தல் திருவிழாவை ரசித்துக் கொண்டிருந்தார்கள். வாழ்நாளில் ஒரு தடவை கூட வாக்களிப்பதில்லை என்று கங்கணம் கட்டிய ஒரு சில தாடிக்கார் அறிவு ஜீவிகள், அங்கே நடப்பதற்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என்பதுபோல் ஆங்கில இதழ்களைப் புரட்டிக் கொண்டிருந்தார்கள். வாக்குப் பதிவு அமைதியாக நடப்பதற்கு உறுதி செய்ய காவலுக்குப் போட்ட போலீஸ்காரர்களும், அங்குமிங்குமாய் பராக்குப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அந்தக் கல்லூரிக்கு வெளியே இரண்டு கட்சிக்காரர்கள் கத்தியும் கம்புமாக சோடாவும் பாட்டிலுமாக ஆயத்த நிலையில் நின்றார்கள்.

ஒரு மாணவப் பட்டாளம், இசைக் கருவிகளோடு பாடிக்கொண்டு, விடுதிகளில் இன்னும் தூங்கிக் கொண் டிருக்கும் மாணவ மாணவியருக்குத் திருப்பள்ளி எழுச்சி பாடியது. ஒருத்தனிடம் உடுக்கு, ஒருத்தியிடம் கஞ்சிராக் கட்டை, இன்னொருத்தன் ஜால்ரா. ஜான்சி, கண்ணகி, இளவரசி போன்ற பெண் விடுதிகளில் வாங்கம்மா வோட்டுப் போட’ என்று ஒரு பையன் முதல் தடவையாக மரியாதையோடு பாடியபோது, சில பெண்கள் மாடி முனைக்கு வந்து “நாங்க என்ன கிழவிகளா, அம்மாவாம். அம்மா. இந்த லட்சணத்துல ஒங்களுக்கு வோட்டு வேற போடணுமா” என்று கேட்டுவிட்டு உள்ளே போய் விட்டார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/107&oldid=1249249" இலிருந்து மீள்விக்கப்பட்டது