பக்கம்:வாடா மல்லி.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 சு. சமுத்திரம்


இந்தக் கேளிக்கைக்கு மறுபக்கம், ஒரு தரப்பு மாணவர்கள் ஒரு லெதர் பைல் கவரை ஒவ்வொருவருக்கும் கொடுத்தார்கள். குறைந்தது முப்பது ரூபாய் வெறும் பைல் கவர். அசல் காகிதம் போன்ற நிறம். உள்ளே வெல்வெட் துணி வியாபிக்க அதன் இரு பக்கமும் இரண்டு ரெக்ஸின் கவர்கள். இரண்டிலும், ஒரு பேனா, ஒரு குறிப்புப் புத்தகம், ‘தலைவனின் படம். இதேபோல், இன்னொரு தரப்பு ஒசைப்படாமல் ஒவ்வொருவருக்கும் ஒரு “கவர்’ கொடுத்தது. அதுக்குள்ளும் பணத்தோடு சேர்ந்த இன்னொரு தலைவனின் படம். பெரும்பாலான மாணவர்கள் ஒன்றை வாங்கி அறைக்குள் போய் வைத்து விட்டு, அடுத்த தரப்பிலிருந்து அதையும் வாங்கிக் கொண்டார்கள். தலைவன்களின் படத்தைக் கிழித்துப் போட மறக்கவில்லை.

இந்த அமர்க்களத்தில், சுயம்பு லுங்கியைக் கட்டிக் கொண்டே அங்குமிங்குமாய் அலைந்தான். அவன் கண்கள் டேவிட்டைத் தேடிக்கொண்டிருந்தன. கண்களைக் கால்கள் பின்பற்றின. அன்றிரவு கைகால் வெட்டிய பிறகு, அவன் மாத்திரைகளை வீசியெறிந்து விட்டான். இன்றும் வழக்கம் போல் அவனுள் ஒரு கலக்கம். ஒரு ஆசை நிராசையானது போன்ற விரக்தி. மூர்த்தியும் முத்துவும் தேர்தல் களேபரத்தில் அவனைக் கண்டுகொள்ளவில்லை.

தனித்துவிடப்பட்ட சுயம்பு, கேட்பாரும் மேய்ப் பாரும் இல்லாமல் மருத்துவ மாணவர் விடுதிப் பக்கம் போனான். டேவிட்டிடம், தனது ஆசைகளையும் நிராசை களையும் கொட்டித் தீர்க்க வேண்டுமென்ற ஒரு ஆவல். ஆனால், அவன் போன இடத்திலோ யாருமில்லை. எல்லோரும் வேடிக்கை பார்க்கப் போய்விட்டார்கள். டேவிட்டும் ஒரு சிறிய குழுவும் தேர்தலில் வன்முறை ஏற்பட்டால் முதலுதவி செய்வதற்கு ஏதோ டிஞ்சரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/108&oldid=1249250" இலிருந்து மீள்விக்கப்பட்டது