பக்கம்:வாடா மல்லி.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ix

வந்தால் ஆயிரக்கணக்கானர்களை மட்டுமே சென் றடையும். அதோடு ஒரு மாமூல் போலீஸ்காரரிடமிருந்து எந்த வகையிலும் வித்தியாசப்படாத இன்றைய திறன் ஆய்வாளர்களால், இந்த நாவல் வாசகச் சிந்தனையில் இருந்து அகற்றப்படலாம். இயற்கையைப்போல் குறைந்த சக்தி நாவல்களையே பராமரிக்கும் நமது இலக்கியவாதி களோடு ஒரு யுத்தம் நடத்த வேண்டுமானால் அது பிரபல பத்திரிகை மூலமாகவே முடியும் என்பதை உணர்ந்தேன். இப்படி நினைத்தபோது என் மனதில் முதலாவதாகவும், முடிவாகவும் நின்றது ‘ஆனந்தவிகடன் பத்திரிகை மட்டுமே. அதன் ஆசிரியர் திரு. எஸ். பாலசுப்ரமணியன் அவர்களுக்கு கதைச் சுருக்கத்தோடு கடிதம் எழுதினேன். சிறிதுகால இடைவெளியில் பச்சைக் கொடி காட்டினார்கள்!

விகடனில் தொடர்கதையாக வந்த இந்த வாடா மல்லி வாசகர் மத்தியில் வெற்றி பெற்றதாக அறிகிறேன். இதற்கு அரும்பணி ஆற்றியதோடு இந்த நாவலுக்கு ‘சுருங்கச் சொல்லி விளங்கவைக்கும் முன்னுரையை எழுதிக் கொடுத்த ஆசிரியர் திரு. பாலசுப்ரமணியன் அவர்களுக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன். இதேபோல் ஒவ்வொரு அத்தியாயம் வெளியாகும்போதும் அதன் தாக்க குறித்து என்னிடம் தெரியப்படுத்திய விகடனின் பத்திரிகையாளர் களான தோழர்கள் சுந்தரம், வி.எஸ்.வி ஆகியோருக்கு என் நன்றி உரித்தாகும். இந்தப் படைப்பிற்கு வாடாமல்லி என்று பெயர் வைத்த எனது அலுவலகத் தோழரும், இலக்கியவாதியுமான திரு சந்தானத்தை இந்த நேரத்தில் நன்றியோடு நினைத்துக்கொள்கிறேன்.

எத்தனையோ படைப்புக்கள் காத்திருந்த போதிலும் இதைப் பெரிய மனதோடு கேட்டு வாங்கிப் பிரசுரிக்கும் ‘வானதி பதிப்பக அதிபர் திரு. திருநாவுக்கரசு அவர் கலுக்கும், அவரது புதல்வர் திரு. இராமநாதன் அவர் களுக்கும் நான் நன்றியுடையேன். அழகான முகப்பு ஒவியம் தீட்டிய அரஸ் அவர்களுக்கும் என் நன்றி!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/11&oldid=1248937" இலிருந்து மீள்விக்கப்பட்டது