பக்கம்:வாடா மல்லி.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி 89


கிறே. லேடிஸ்னா ஒனக்கு அவ்வளவு கேவலமாப் போச்சு இல்லியா. இது என்ன அமெரிக்கான்னு நெனைச்சியா. கண்ணகி பிறந்த நாடுடா. ஒனக்கு எவ்வளவு தைரியம் இருந்தால் அவங்களை இப்படி இம்சிப்பே. எனக்குத் தெரியும்டா. சீனியர் மாணவிகள், ஒன் மூர்த்திக்கு வோட்டுப் போட மாட்டாங்கன்னு தெரிஞ்சு, நீ வேணும்னே இங்க வந்து, கலாட்டா செய்யுறே. என்னடா நெனைச்சுக்கிட்டே.”

சுயம்பு, எதுவும் நினைக்காமல் சும்மா நின்றபோது, முத்துவும் மூர்த்தியும் அங்கே ஓடி வந்தார்கள். மூர்த்தி, பொன்முகத்தின் மோவாயைப் பிடித்துக் கொஞ்சியபடியே “இவன் லூசு அண்ணே. ஒங்களுக்கே தெரியும். விகற்பம் இல்லாமல் நடந்திருப்பான்... நான் அவங்ககிட்ட மன்னிப்புக் கேட்கச் சொல்றேன் அண்ணே. டேய் சுயம்பு. அறிவு கெட்டவனே. அவங்ககிட்ட மன்னிப்புக் கேளுடா” என்று கத்தினான்.

சுயம்புவும், அவளிடம் மன்னிப்புக் கேட்பதற்காக முகத்தைக் குழைத்தான். அவளும் அதை ஏற்றுக் கொள்ளப் போகிறவள் போல் கையிலிருந்த ஒற்றைச் சிலம்பைக் கீழே போட்டாள். தாய்க்குலம், ஏற்கெனவே பேர் வாங்கிய சுயம்புவை, கருணையோடு பார்த்தது. அந்தக் கருணை மூர்த்திக்கு ஆதரவாகக் கைகளில் வந்துவிடக் கூடாதே என்று எச்சரிக்கையான பொன்முகன், ஒரு புகார்ப் பட்டியலையே அடுக்கினான்.

“இந்த மாதிரி வேற எங்கயோ , லேடீஸ்கிட்ட கலாட்டா பண்ண நீ போயிருக்கிறே. ஒன் பேட்ச் பசங்க என்னடான்னா, நாங்கள் - சீனியர்கள் ஒன்னைக் கடத்துனதா புகார் கொடுக்கிறான்கள். நீ என்னடான்னால், அன்றைக்கு அந்த எம்.பி.பி.எஸ். பெண்ண மொலஸ்ட் செய்யப் போனே. இன்னிக்கு என்னடான்னா, இந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/111&oldid=1249253" இலிருந்து மீள்விக்கப்பட்டது