பக்கம்:வாடா மல்லி.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 ♦ சு. சமுத்திரம்


பிரமிளாகிட்ட வம்பு செய்யுறே. இதுல நீ மட்டும் சம்பந்தப் படலடா. சீனியர்களுக்கு எதிரா ஒரு பெரிய திட்டமிட்ட சதியே இருக்குது!”

பொன்முகன், தனது பக்கத்திலிருந்த மாணவர்களைக் கண்ண்டித்தான். உடனே எல்லோரும் கூச்சலிட்டனர். மூர்த்தியால் இப்போது செய்வதற்கு ஏதுமில்லை. அந்த வளாகமே அலறியது. வெளியே நின்ற அரசியல்வாதிகள் பாதிதூரம் வந்துவிட்டார்கள். இதற்குள் போலீஸார் உஷாரானார்கள். ஒரு பகுதியினர் அரசியல்வாதிகளைக் கெஞ்சிக் கொண்டிருந்தபோது, இன்னொரு பகுதியினர் அந்த அடாவடி இடத்திற்குப் போனார்கள். போலீஸ் இன்ஸ்பெக்டர் மைக்கில் எங்கேயோ பேசிவிட்டு அங்கே தனித்து வந்தார்.

“நீங்கல்லாம் ஸ்டூடண்ட்ஸ். என்ன நடந்ததுன்னு அம்ைதியா சொல்லுங்க.”

பிரமிளா சொல்வதற்கு முன்பே, பொன்முகன், பொறிந்து தள்ளினான்.

“நாங்க சீனியருங்க, சார். சீனியர்கள் முகத்துல கரி பூசணும்னே கொம்பு முளைக்காத பசங்கல்லாம் திட்டமிட்டு இந்த சுயம்புவை. எங்களுக்கே சீனியரான இவங்கள-இந்த பிரமிளாவை மொலஸ்ட் செய்ய அனுப்பியிருக்காங்க ஏற்கெனவே இவன் ஒரு ஏடாகூடம். லேடீஸ்கிட்ட தப்புந்தவறுமா நடக்கிறவன்.”

“என்னப்பா பொல்லாத தப்பு. அசல் லூசன். வோட்டுப் போட ஸ்கூட்டர்ல ஏறிக்கட்டுமான்னு கேட் டிருக்கான். இதப் போய் ஒரு பெரிய விஷயமா...”

“இது பெரிய விஷயமில்லியா. இன்னிக்கு ஸ்கூட்டர்ல ஏறுறேன்னு கேட்டான். நாளைக்கு ரேப் பண்றேம்பான். இது என்ன காலேஜா, இல்ல இவன் அப்பன் வீட்டு அந்தப்புரமா... என்னய்யா பேச வந்திட்டே."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/112&oldid=1248652" இலிருந்து மீள்விக்கப்பட்டது