பக்கம்:வாடா மல்லி.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி 93


இவனால எங்க பொறியியல் மாணவர் சமுதாயத்துக்கே அவமானம் சார்.”

“அப்படியா மை யங்கமேன்.”

சுயம்பு, அரிச்சந்திரன் மாதிரி தலையாட்டினான். இதற்குமேல் மூர்த்தியால் பொறுக்க முடியவில்லை. முத்து வேறு அவன் முதுகைக் கிள்ளிவிட்டான்.

“சார். சார். இவன் மனநிலை சரியில்லாதவன் சார். போனவாரம் சைக்யாட்ரிஸ்ட் கிட்டகூட கூட்டிட்டுப் போனோம் சார். மனசு சுத்தமானவன் சார்.”

‘புத்திசாலியான போக்கிரிய விட, சுத்தமான முட்டாள் அபாயமானவன்னு உனக்குத் தெரியுமா யங் மேன். நீ இதுல தலையிடாதே. மை டியர் சைல்ட். உன் பேரு என்னம்மா.. என்ன நடந்ததும்மா...”

பிரமிளா அழுதாள். அவள் அடித்த இடத்திலேயே, சில பெண்கள் சுயம்பு மனநோயாளி என்று அவள் காதைக் கடித்தார்கள். அப்படிப்பட்ட ஒருவனை, இப்படிச் செய்து விட்டோமே என்று மனவாதையில் அழுதாள். விட்டுடுங்க சார் என்றுகூட சொல்லப் போனாள். ஆனால் இப்போது கடைசியாக அவர் சேர்ந்திருக்கும் பொன்முகத்தைப் பார்த்தாள். அந்த முகம் இறுகிக் கிடந்தது. அவளால் அழத்தான் முடிந்தது. பேச முடியவில்லை. இந்த அழுகை யையே, பதிவாளரும், இன்ஸ்பெக்டரும், சுயம்புவுக்கு எதிரான ஒரு சாட்சியமாக எடுத்துக் கொண்டார்கள். பொன்முகன், அவளுக்குப் பிரதிநிதியாகப் பேசினான்.

“ஒருவர் செயல்பட்டால்தான் மதிப்பீடு செய்யப்படு கிறார். நோக்கங்களால் அல்ல... ஆக்ஷன்... நாட் இன்டென்ஷன். நாளைக்கே இவன் ஒரு பெண்ணை ரேப் செய்யலாம். தட்டிக் கேட்கிற, என்னை மாதிரி ஆட்களை கொலைகூடச் செய்யலாம். மனநிலை சரியில்லன்னு அப்போ சொல்ல முடியுமா. அதோட பிரமிளா லோக்கல்

8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/115&oldid=1249256" இலிருந்து மீள்விக்கப்பட்டது