பக்கம்:வாடா மல்லி.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 சு. சமுத்திரம்


கேர்ள். அவங்க கம்யூனிட்டி இந்த டவுனில் அதிகம். நாளைக்கே கதவடைப்பு செய்தால் நம்ம காலேஜுக்கு கெட்ட பேரு இல்லியா. ஒரு பெண்ணை மானபங்கப் படுத்துணவனுக்கு பதிவாளரான நீங்க என்ன தண்டனை கொடுக்கப் போlங்க?”

இன்ஸ்பெக்டர் நிமிர்ந்தார்-தான் ஏன் தீர்மானிக்கக் கூடாது என்பதுபோல். அதோடு கதவடைப்பு நடந்தால் முதல் சஸ்பெண்ட் அவர்தான். பதிவாளரிடம் நாசூக்காக பேசப் போனவர் திடுக்கிட்டு எழுந்தார். ஒரு சல்யூட் அடித்தார். அதை ஏற்றுக்கொண்டே உள்ளே வந்த டி.எஸ்.பி ரிஜிஸ்ட்ராரைப் பார்த்து வணக்கம் போடாமலே தனது வருகையின் நோக்கத்தைக் குறிப்பிட்டார்.

“இந்தப் பெண்தான் மொலஸ்ட் ஆன பொண்ணு இல்லியா? இவங்கள மெடிகல் டெஸ்டுக்கு அனுப்பணும்.”

இப்போது முத்து குமுறினான். “இது லாக்கப் இல்ல சார். காலேஜ்.”

“நீ யாருடா கொம்பன். யார்கிட்ட பேசறோம்னு நினைத்துப் பேசு. இன்ஸ்பெக்டர். இவனுக்கு ஒரு டோசியர் போடு.”

“எஸ் சார். இம்மீடியட்லி சார்.”

முத்துவின் வாயை மூர்த்தி மூடிக்கொண்டான். சுயம்பு எதுவுமே நடக்காததுபோல் அப்படியே நின்றான். பிரமிளா தனக்காக அழுதாள். சுயம்புவிற்காக அழுதாள். ஒரு முரட்டுப் பயலை - ஒரு தந்திரக்காரனை முன்பின் யோசிக்காமல் அவனே கதியென்று ஆகிவிட்டோமே என்று முப்பெரும் அழுகையாய் அழுதாள். அந்த அழுகையால் கோபப்பட்ட டி.எஸ்.பி. சுயம்புவை முறைத்தார். விவகாரத்தைக் கைவிட விரும்பிய பதிவாளர், இப்போது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/116&oldid=1249257" இலிருந்து மீள்விக்கப்பட்டது