பக்கம்:வாடா மல்லி.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

X


நாவல் வேறு. தொடர்கத்ை வேறு. விகடனில் வெளியான தொடர்கதையை எப்படி நாவல் ஆக்கலாம் என்று அரும்பெரும் கருத்துக்களை அள்ளித் தந்ததோடு, அருமையான ஆய்வுரையைத் தந்திருக்கும் பேராசிரியர், டாக்டர் ராம. குருநாதனுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன். இதேபோல் தொடர்கதையை நாவலாக்கும் பணியில் நான் சோம்பிக் கிடந்தபோது என்னை உரிமையோடு தட்டியும், ‘திட்டியும் நாவலாக்க வைத்த எனது பால்யதோழர் தேசிய முழக்கம் தர்மலிங்கம் அவர்களுக்கு நான் நன்றிக்கடனை திருப்பிச் செலுத்துவது என்பது கடினம்.

விகடனில் வந்த வாடாமல்லி தொடர்கதையை நாவலாக்கி, கூடவே சில அத்தியாயங்களையும் இணைத்து உருவாக்கிய இந்த நாவல், வாசகர்களாகிய உங்களிடையே உலாவருகிறது. முதல் மூன்று அத்தியாயங்களை சமூகப் பொறுப்போடு படித்தால், இதர அத்தியாயங்கள் உங்களை ஈர்த்துவிடும். ஏற்கனவே ஒரு சில வெளிநாட்டுப் பத்திரிகை யாளரும், தொலைக்காட்சியினரும் என்னைப் பேட்டி கண்டுவிட்டு சென்றிருக்கிறார்கள்.

இது, அலிகளைப் பற்றி மட்டும் எழுதிய நாவல் அல்ல! ஒரு அலியைப் பிறப்பித்த பெற்றோர் படும் பாட்டையும் அந்தக் குடும்பம் கெடும் கேட்டையும் சித்திரிக்கும் நாவல். இதைப் படித்து முடித்ததும் இந்த அப்பாவி ஜீவன்களுக்காக ஒரு நிமிடம் உங்களுக்கு வருந்தத் தோன்றினால் அது இந்த நாவலின் வெற்றி! இவர்களுக்கு ஏதாவது தொண்டாற்ற வேண்டும் என்று உங்களுக்குத் தோன்றினால் அது என் வெற்றி! வானதி பதிப்பகத்தின் வெற்றி! விகடனின் வெற்றி! எல்லாவற்றிற்கும் மேலாய் மனித நேயத்தின் வெற்றி!

நெ. 9, 11-வது குறுக்குத் தெரு, சு. சமுத்திரம் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், சென்னை - 600 041.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/12&oldid=1248938" இலிருந்து மீள்விக்கப்பட்டது