பக்கம்:வாடா மல்லி.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 சு. சமுத்திரம்


அந்தப் பதிவாளர், அவன் லுங்கியைப் பார்த்து லேசாய் திடுக்கிட்டதுபோல், பேப்பர் வெயிட்டை எடுத் தார். பிறகு முன்னால் இருந்த இருவரிடம் ஏதோ சொல்ல, ஆறுமுகப்பாண்டி திரும்பினான். பிள்ளையார் அசையாது இருந்தார். அவர்களைப் பார்த்துவிட்ட சுயம்புவும், அண்ணன் பக்கத்தில் போய் நின்றான். அவன் கண்கலங்க சுயம்புவின் கைகளைப் பிடித்தான். பிள்ளையாரோ, அவன் அங்கே இல்லாததுபோல் மேலே ஒடும் மின் விசிறியை வெறித்துப் பார்த்தார். அப்போது பதிவாளர் குழைந்தார்.

“உட்காருப்பா. சும்மா உட்கார். நீ உட்காரலாம். யூ ஆர் நோ லாங்கர் மை ஸ்டூடண்ட்.”

சுயம்பு, உட்காரவில்லை. இதற்குள் தட்டெழுத்துப் பெண் ஒருத்தி கையில் ஒரு ஃபைலோடு வாசல் பக்கம் நின்றாள். அங்குமிங்குமாய் பராக்குப் பார்த்துப் பேச்சு நடப்பதைப் பற்றிக்கூடப் பொருட்படுத்தாமல் பைல் கட்டை அலட்சியமாக மேஜையில் வீசி அடிப்பதுபோல் வைத்துவிட்டு, இடுப்பில் கை வைத்து நிற்காமல், அவள் காலடியால் அவர்கள் கவனம் கலையக்கூடாது என்பது போல் மெள்ள மெள்ள நடந்தாள். அது அவள் நடத்தையையும் காட்டியது. பதிவாளரும், அவளும் யோக்கியமானவர்கள் என்பதை விஷூவலாகக் காட்டுவது போலவும் இருந்தது.

பதிவாளர், அவள் மேஜையில் வைத்த பொன்வண்ணக் கோப்பை வாங்கி, அச்சடித்தது போலான மின்னணு டைப்பிங் காகிதத்தை பிள்ளையாரிடம் நீட்ட, அவர் பேசாமல் இருந்ததைப் பார்த்துவிட்டு, ஆறுமுகப் பாண்டியிடம் கொடுத்தார். அவன் படித்துப் பார்த்துவிட்டு மன்றாடினான்.

“இந்த ஒரு தடவ மட்டும் மன்னிச்சிடுங்க சார். இவன் அப்படிப்பட்டவன் இல்ல சார். ஒரு புழுவைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/120&oldid=1249261" இலிருந்து மீள்விக்கப்பட்டது