பக்கம்:வாடா மல்லி.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி 99


பார்த்தாக்கூட ஒதுங்கிப் போறவனை ஒரு புழுவாய் ஆக்கிடாதீங்க சார்.”

பதிவாளர் ரிப்பன்களைப் பூவாக வைத்திருந்த அந்தப் பெண்ணைக் குறிப்பாய்ப் பார்க்க, அவள் வெளியேறினாள். அந்த அறையின் அறைக் கதவுகளின் ஆட்டத்தையே பார்த்தவர், அந்த ஆட்டம் முடிந்ததும் பேசினார்.

“நான் ஏற்கெனவே சொன்னது மாதிரி, இது முடிஞ்சு போன விஷயங்க. இவன் நல்ல பையன். அப்படிப் பட்டவன் இல்லன்னு எனக்குத் தெரியும். ஆனாலும் ரெண்டு தடவை இப்படி நடந்தவன் மூன்றாவது தடவை வேற மாதிரியும் நடக்கலாம் இல்லியா. அதோட. சரி, அதெல்லாம் உங்களுக்கு வேண்டாம். நாங்க ஒங்க பையனை நீக்கலன்னா, போலீஸ் கேஸாயிடும். அன்றைக்கே எஸ்.பி. உங்க பையனை ஒப்படைக்கும்படி யாய்ச் சொன்னார். நான்தான் மறுத்துட்டேன். இன்றைக்குக்கூட ரெண்டு தடவை போன் செய்துட்டார். போலிஸ்ல மாட்டுனால், என்ன ஆகும்னு ஒங்களுக்கே தெரியும். விவகாரம் கோர்ட்டுக்குப் போனால் யுனிவர் சிட்டியோட எல்லாக் கதவையும் இழுத்து மூட வேண்டியதுதான். தனி மனிதனைவிட, ஒரு நிறுவனம் ரொம்ப முக்கியம் இல்லியா. நாங்க, இவன், அந்த பொண்ணுகிட்ட நடந்தது சரிதான்னு கோர்ட்ல வாதாட முடியுமா. நீங்களே சொல்லுங்க..”

“இவன் நடந்ததை சரின்னு சொல்லலை சார். சரிப் படுத்துங்கன்னுதான் சொல்றேன். கருணை காட்டச் சொல்லுறேன். பிச்சை. கேட்கேன்.”

“அழாதீங்க மிஸ்டர் ஆறுமுகப்பாண்டி. நாங்க கருணை காட்டியிருக்கத்தான் செய்யுறோம். இவன் வேண்டுமென்றே செய்திருந்தால், காலேஜ விட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/121&oldid=1249262" இலிருந்து மீள்விக்கப்பட்டது