பக்கம்:வாடா மல்லி.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 சு. சமுத்திரம்


எக்ஸ்பெல் செய்திருப்போம். அப்படிச் செய்திருந்தால் ஒங்க தம்பிய வேற எந்தக் காலேஜுலயும் சேர்க்க முடியாது. கவர்மெண்ட் வேலைக்கும் போக முடியாது. ஆனால் நாங்க அப்படிச் செய்யல. நீங்களே மனுப்போட்டு ஓங்க பையனோட டி.சி.யை கேட்கிறது மாதிரிதான் அந்தக் காகிதத்திலே எழுதியிருக்கோம், ஒங்களுக்கு இஷ்டமுன்னா கையெழுத்துப் போடுங்க. இல்லாட்டால்.”

பதிவாளர், இழுத்தபோது, பிள்ளையார் எழுந்தார். பெஞ்சுமேல் ஏற்றப்பட்ட அந்தக் காலத்து மாணவன் போல் கைகளைக் கட்டிக்கொண்டு ஒரு செய்யுளை ஒப்பிப்பதுபோல் ஒப்பித்தார். துக்கமும், துயரமும், எதுகை மோனையாக உடைந்த குரலோடு ஒப்பித்தார்.

“இவன் தானாய் முளைச்ச காட்டுச்செடி அய்யா. எங்க ஊரு மோசமுன்னா, அதுலயே எங்க வம்சம் படுமோசம் அய்யா. எங்க வகையறாவுல எவனுக்கும் பெருவிரலக்கூட பெறட்டத் தெரியாது அய்யா... இதனாலயே எங்க வகையறாவுக்கு தற்குறிக் குடும்பம்னு பேரு அய்யா. அதனாலதான், இவன் எட்டாவது படிக்கும் போது ‘வயலவிட உனக்கு பள்ளிக்கூடம் பெரிசா யிட்டோன்னு அடிக்கக்கூடப் போனேன். இவன்தான் என்னைச் சத்தம் போட்டு, தம்பிக்குப் பதிலாக நான் ரெண்டு மடங்கு வேலை பாக்கேன்னு இவன மேல மேல கொண்டு படிக்கவிட்டான். கடைசி சர்க்கார் பரீட்சை எழுதி, இவன் நல்ல மார்க் வாங்குனதாய், பெரிய மவன் சொன்னபோது, “ஒன் தம்பிய வயல் வேலையப் பார்த்துக் கிட்டே சர்க்கார் வேலைக்கு எழுதிப்போடச் சொல்லுன்னு சொன்னவன்யா நான். இந்த ரெண்டு பயல்களும் சேர்ந்து இங்க எழுதிப்போட்டது எனக்குத் தெரியாது அய்யா. இடம் கிடைச்சதும் பணமுன்னு வந்தது. பெரியவன் தலையைச் சொரிந்தான்யா. இந்தப் படிப்பு படிச்சா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/122&oldid=1249263" இலிருந்து மீள்விக்கப்பட்டது