பக்கம்:வாடா மல்லி.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி 101


என்ன வேலை கிடைக்குமுன்னு கேட்டேன்யா. நான் கனிஞ்சத பார்த்துட்டு ஒங்க முன்னால நிக்கானே, இவனே ‘கடைசிப் பரீட்சை முடியும்போதே வெளி தேசத்துக்கு போற வேலை கிடைக்கும். ஆயிரக்கணக்குல ரூபா கிடைக்குமுன்னு சொன்னான். உடனே நான் இவன பிடறியில ஒரு போடு போட்டேன்யா. செருக்கி மவனே, பாசை தெரியாத ஊருக்குப் போய் வேஷத்தை மாத்தி நீ எங்களை மறக்கதுக்கு ஒன்ன நான் படிக்க வைக்கனுமா. இந்த ஒண்ணுக்காகவே உன்னைப் படிக்க வைக்க மாட்டேன்னு சொல்லிட்டேன்யா. பெரியவன். அதான் இவன், எனக்குத் தெரியாமல். எங்க ஊர் காண்ட்ராக்டர் கிட்ட மூவாயிரம் ரூபாய் கைமாத்தா’ வாங்கி, இவனை இங்க சேர்த்தான். பைத்தியக்காரப் பயல். அந்தக் காண்ட்ராக்டரு என் காதைக் கடிச்சபோது. நான்தான் ஐயாயிரமா கொடுக்கும்படிச் சொன்னேன். இந்த குட்டை இப்பதான்யா போட்டு உடைக்கேன்.”

“எய்யா. எய்யா. எங்க வம்சம் கொத்தனாரையும், சித்தாளையும் மட்டுமே கொடுத்து வந்த வம்சம்யா! அந்த வம்சம் தழைக்க இவன் பிறந்திருக்கான்யா. தர்மப் பிரபுவே. கருணை காட்டு. இவனத் திருப்பி அனுப்னிங் கன்னா, என் வீட்டுக்காரி தாங்கமாட்டாய்யா... ஏற்கெனவே என் மகளை அவள் அண்ணன் மகனுக்குக் கொடுக்கலன்னு ஆடிப்போயிருக்காள். என் பிள்ளைகள் அவளுக்குக் கொள்ளி போட வச்சிடாதீங்க அய்யா...”

பதிவாளர் உருளை நாற்காலியில் அங்குமிங்குமாய் நெளிந்தார். திடீரென்று ஆறுமுகப் பாண்டி எழுந்தான். உட்கார்ந்திருந்த நாற்காலியைத் தரையோடு சேர்த்து இழுத்துப் போட்டான். சிறிது பின்னுக்கு நடந்தான். பிள்ளையாரும், பதிவாளரும் பயந்துபோய் எழுந்தபோது அப்படியே தொப்பென்று விழுந்தான். நீச்சலடிப்பதுபோல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/123&oldid=1249264" இலிருந்து மீள்விக்கப்பட்டது