பக்கம்:வாடா மல்லி.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 சு. சமுத்திரம்


கைகளை ஊன்றி, ஊன்றி நகர்ந்து மேஜையின் அடிவாரக் கட்டைகளுக்கு மேலே கையைப் போட்டு, பதிவாளரின் கால்களைத் தேடித் தேடி, தேடியதைப் பிடித்துக்கொண்டு புலம்பினான். “கருணை காட்டுங்க சார். கருணை காட்டுங்க. பிச்சிப்பூவை பிக்கறது மாதிரி பிச்சிடாதீங்க சார். அய்யா. தர்மராசா...” என்று அரற்றினான்.

பதிவாளர் ஆடிப்போனார். வெளியே ஒரு சின்னக் கூட்டம் கதவுகளுக்கு இடைவெளி கொடுத்து எட்டிப் பார்த்தது. பதிவாளர், அவர்களைப் பார்த்து ‘கெட்அவுட்’ என்று கத்தி தனது இயலாமைக்கு வடிகாலை ஏற்படுத்தினார். பிறகு இன்டர்காமில், வி.ஸி.யிடம் ஆங்கிலத்தில் பேசினார். அடுத்த முனையில் ஒரு கத்தல் வந்தது; இந்த முனையில் இருந்த பிள்ளையாருக்கும் அதன் உக்ரம் சுட்டது. பேசி முடித்த பதிவாளர் உதட்டைப் பிதுக்கியபடியே பேசினார்.

“காலேஜ் எலெக்ஷனக்கூட போலீஸ் வெச்சு நடத்த வேண்டிய காலம் இது. கள்ளச்சாராயம் காச்சுறவன்கூட படிக்கிற காலம் இது. இந்த சிலந்திவலைக் காலத்துல, ஒங்க பையன் எப்படியோ சிக்கிட்டான்... ஐயாம் ஸாரி. இந்தாம்மா அந்த சர்டிபிகேட்களை கொண்டு வாம்மா. பெரியவரே. அந்த காகிதத்துல ஒரு சின்னக் கையெழுத்து போடுறீங்களா... சுயம்பு நீயும் போட்டுடு. மிஸ்டர் ஆறுமுகப் பாண்டி எழுந்திருங்க... என்னால செய்ய முடிஞ்சது ஒங்க தம்பிய போலீஸ்ல ஒப்படைக்கப் படுறதைத் தடுத்ததுதான்.”

ஆறுமுகப் பாண்டி, எழுந்தான். அப்பாவைப் பார்த் தான். முதியோர் கல்வி இயக்கத்தால் கையெழுத்துப் போட மட்டுமே தெரிந்த பிள்ளையார், பதிவாளர் நீட்டிய பேனாவைப் பிடித்தபடியே யோசித்தார். அப்போது ஆறுமுகப் பாண்டி பழையபடி “சார்” என்று சொல்லிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/124&oldid=1249267" இலிருந்து மீள்விக்கப்பட்டது