பக்கம்:வாடா மல்லி.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 சு. சமுத்திரம்


என்று அவனைக் கட்டிப் பிடித்துக்கொண்டார். மூர்த்தி தான் தன்னை அடக்கிக்கொண்டு சமாளித்தான்.

“நீங்க போய்க்கிட்டே இருங்க நான் இவன சமாளிச் சிட்டு பின்னாலயே வாறேன். ஏய் முத்து. என்னடா இதெல்லாம்.”

ஆறுமுகப் பாண்டி, சுயம்புவை லேசாய் தள்ளிவிட் டான். அவனோ, தனது தோழர்களைப் பார்த்தான். உள்ளே இருக்கும் இதயத்தைக் காட்டுவதுபோல், உதடுகள் பிரிந்தன. கண்ணிர் பார்வையை மங்கடித்தது. கண்களைத் துடைக்காமலேயே அந்த அறையை விட்டு வெளியேறினான். மீண்டும் திரும்பிவந்து, தான் தடம் போட்ட இடத்தைப் பார்த்தபடியே நின்றான். பிறகு கீழே ஒரே ஒட்டமாய் ஓடினான். ஒவ்வொரு அறையிலும் மூவிரண்டு ஆறு கண்கள். நீர் சொரியவில்லையானாலும், நிம்மதியற்றுத் தவித்தன. ஒரு அறையில் கண்ணதாசனின் ‘பாடிச் செல்லும் பறவைகளே’ என்ற பாடல் வேண்டுமென்றே ஒரு சோகப் பகிர்வாக டேப்பில் ஒலிக்க விடப்பட்டது.

ஆறுமுகப் பாண்டி, கையிலிருந்த டிரங்க் பெட்டியைத் தலைக்கு மாற்றி அதை முன் பக்கமாய் சிறிது சாய்த்து, தமது கண்ணிரை மறைக்க முயற்சி செய்தான். எந்தப் படிகள் வழியாய் ஏறி, தம்பியைப் பார்க்கவும், பணம் கொடுக்கவும் வருவானோ, அந்தப் படிகளில் இனி ஏற முடியாது என்ற எண்ணத்தில் அவன் கலங்கியபோது, அவன் கண்ணிரும் கன்னத்தில் இறங்கியது.

இந்த மூவரும் தங்கள் பாட்டுக்கு நடந்தார்கள். ஆங்காங்கே விடுதிகளின் வெளிப்பகுதிகளில் ஏதோ சொந்த அறையில் துக்கம் நடைபெற்ற தோரணையில் நின்றவர்களைப் பார்க்காமலே தந்தையும் பெரிய மகனும் நடந்தபோது, சுயம்பு அவர்களைப் பார்த்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/128&oldid=1249271" இலிருந்து மீள்விக்கப்பட்டது