பக்கம்:வாடா மல்லி.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி 107


கையாட்டினான். அவர்களின் இதயத்தையே இழுத்துப் போடுவது போன்ற ஒரு அப்பாவிக் கையாட்டு. அதனால் உடம்பு எல்லாம் ஆடிப்போய் அந்த மாணவர்கள் மூச்சைப் பிடித்துக்கொண்டு நின்றார்கள்.

விருந்தினர் விடுதிப் பக்கம் வந்ததும், சுயம்பு நின்றான். அதோ, அந்த டீலக்ஸ் கட்டிடத்தில்தான் டேவிட். என் டேவிட் இருக்கார். நான் படும்பாடும். பட்ட பாடும் அவருக்குத் தெரியுமோ, தெரியாதோ..

அப்போது அங்கே வந்த மூர்த்தியின் காதில் ரகசியம் பேசுவதுபோல் பேசிவிட்டு, சுயம்பு ஓடினான். அனைத்தையும் அதிர வைக்கப் போவதுபோல் ஓடி, டேவிட்டின் திறந்த வாசல் வழியே உள்ளே போனான். சிறிது சந்தோஷப்பட்டான். டேவிட் மட்டுமே தனியாய் இருக்கார்.

உருண்டு திரண்ட வாலிப்ால் களையோடு, எகிறி எத்திய உருளைக் கால்களோடு ஓங்கி, ஒங்கியடித்து வைரப்பட்ட டேவிட்டின் கைகள் எதையோ எழுதிக் கொண்டிருந்தன. அவன் கையைப் பிடித்து எழுதுவதை நிறுத்த வைத்து, சுயம்பு சொன்னான்.

“என்னை வெளியேத்திட்டாங்க டேவிட்.”

“கேள்விப்பட்டேன். மோசமான நியூஸ். மாணவ அரசியல்வாதிக்கு உங்களைப் பலி கொடுத்துட்டாங்க. இருக்கவே இருக்கு அடுத்த வருஷம். மொதல்ல உங்க மனநிலையை நல்லா வச்சுக்கணும். சைக்யாட்ரிஸ்ட்கிட்ட போங்க தம்பி.”

“நான் ஒண்ணும் தம்பி இல்ல..என் மனநிலை சரியாத்தான் இருக்கு...என்னப் புரிஞ்சுக்கிற மனநிலை தான் உங்களுக்கு இல்ல. நான் ஒண்ணு கேட்பேன் தருவீங்களா?.டேவிட்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/129&oldid=1249272" இலிருந்து மீள்விக்கப்பட்டது