பக்கம்:வாடா மல்லி.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 சு. சமுத்திரம்


“உயிரைத் தவிர எதை வேணும்னாலும் கொடுக்கத் தயார்ாயிருக்கேன்.”

“ஒங்க போட்டோவைக் கொடுங்க..”

டேவிட், ஏதோ கேட்கப் போனான். சுயம்புவிற்கு மனநிலை முற்றிவிட்டதை அறிந்து அதிர்ந்தான். அவன் கேட்டது கிடைக்காமல் மேலும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, எதையோ குடைந்து ஒரு போட்டோ பிரதியை எடுத்து, சுயம்புவின் சட்டைப் பைக்குள் வைத்தான். அவன் தோளைத் தட்டிக் கொடுத்தான். சுயம்பு, கண்ணிரும் கம்பலையுமாய் கேவினான்.

“நான் வாறேன். டேவிட். என் உடம்புல உயிரு இருக்கிற வரைக்கும் ஒங்களை மறக்க மாட்டேன் டேவிட் நீங்களும் என்னை அப்பப்ப நினைத்தால் அதையே பெரிய பாக்கியமா நினைப்பேன் டேவிட் மூர்த்திகிட்ட அட்ரஸ் இருக்கு. லெட்டர் போடுங்க டேவிட்... நானும் லெட்டர் போடுறேன் டேவிட்... என்ன மறக்க மாட்டீங்களே டேவிட்...” -

சுயம்பு, டேவிட்டின் மார்பில் சாய்ந்தான். டேவிட் அவன் முதுகைத் தட்டிக் கொடுத்தான். பிறகு அவனை தனது தோளோடு தோளாய்ச் சேர்த்துக் கீழே இறக்கினான். மூர்த்தி நின்ற பக்கம் சுயம்புவின் கையைப் பற்றியபடியே சுயம்புவை இழுத்துக்கொண்டு போனான். பிள்ளை யாரிடம் அவனை ஒப்படைத்துவிட்டு அவனுக்காக கர்த்தரிடம் ஜபிப்பதுபோல் தலை தாழ்த்தி நின்றான். பிறகு மூர்த்தியை மெளனமாக நோக்கிவிட்டுப் போய் விட்டான். அப்படிப் போனவனையே பார்த்து சுயம்பு, விம்மியபோது பிள்ளையார் புலம்பாக் குறையாய் பேசினார்.

“ஏடா பெரியவன். நடு ராத்திரிக்கு வீடு போறது மாதிரியான பஸ்ஸா பாருடா. இல்லாட்டா... ஊரு சிரிக்கும். நம்ம வீட்டுக்கே நாம தலை மறைவா போக வேண்டிய காலம் வந்துட்டே காலம் வந்துட்டே."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/130&oldid=1249273" இலிருந்து மீள்விக்கப்பட்டது