பக்கம்:வாடா மல்லி.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 சு. சமுத்திரம்


கிசுகிசுப்பு. கல்லூரியில் இப்படிப்பட்ட ஒரு அப்பாவி, ஒரு பெண்ணை பலவந்தமாகக் கற்பழிக்க முடியுமா என்று ஒரு வாதம். இந்தக் காலத்தில் அப்பாவிகளைத்தான் நம்ப முடியாது என்று ஒரு எதிர்வாதம். கடந்த காலத்தில் இறந்த சீதாலட்சுமி, அன்னக்குஞ்சு, வடிவரசி, போன்றவர்கள் அவனை ஆட்டிப்படைப்பதாக ஒரு ஐதீகப் பேச்சு. அவன் எப்போதாவது ஊருக்குள் போனால், பெண்கள் பக்கமே நிற்பதை நினைத்து, ஊராருக்கு அவன் மீதிருந்த சந்தேகம் ஒரளவுக்கு உறுதிப்பட்டது. பொம்பளக் கள்ளன். இந்தப் பின்னணியில், சுயம்பு வலது பக்க அறையில் கட்டில் காலில் சாய்ந்தபடி கிடந்தான். அந்த அறையில்தான் மரகதக்காவும், மோகனாவும் தங்குவது. இப்போது சுயம்புவும் அங்கே சேர்ந்துகொண்டான். மேலே குறுக்காகக் கட்டப்பட்ட கொடியில் சேலைகளும் பாவாடைகளும் தொங்கின. மோகனாவின் தாவணி மடிப்புக் கலையாமலும், அக்காவின் சேலைகள் முரடு முரடாய் சுருண்டும் கிடந்தன. ஒரு சின்ன-ஐந்தடி உயர அழகு பீரோ. வெளியே மருதாணிக் கலர். இடையிடையே பச்சைப் புள்ளிகள். அந்தப் புள்ளிகளே ஒரு கோடு மாதிரியும் தோன்றியது. அக்காவின் கலியாணத்திற்கு சீதனமாக வாங்கி வைத்திருப்பது.

சுயம்பு, மனவலி தாங்காமல் தலையைச் சுற்றினான். இதுவரை எதுவும் பேசாத அப்பா, இன்றைய எட்டாவது நாளில் நாம தலைமறைவா இருந்தாக்கூட சில பயலுவ வயலு வரைக்கும் வந்து தெரியாதது மாதிரிக் கேக்கான். சீக்கிரமா இவனுக்கு ஒரு கலியாணத்தை செய்து வையுங்கன்னு சிபாரிசு செய்யுறான். உயரப் பறந்தாலும், ஊர்க்குருவி பருந்தாக முடியுமான்னு பேசுறாங்களாம். இவன் வாயைக் கிளறி வேடிக்கை வேறு பாக்காங்களாம். செறுக்கி மவன ஊருக்குள்ள போக வேண்டாம்னு தட்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/132&oldid=1249274" இலிருந்து மீள்விக்கப்பட்டது