பக்கம்:வாடா மல்லி.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி 111


வையுங்க!” என்று அவமானமும், துக்கமும் விரவ சொல்லி விட்டுப் போய்விட்டார்.

சுயம்பு இந்த உச்சிவெயில் சமயத்தில், உடம்பு வேர்க்கக் கிடந்தான். அப்பாவிடம் சிபாரிசு செய்யப்பட்ட கல்யாண யோசனையை நினைக்க நினைக்க எங்காவது ஒடிப் போய்விட வேண்டும் என்ற வேகம். தனிமைப் பயம். அம்மாவும் அண்ணியும் வெளி ஊரில் துஷ்டி கேட்கப் போய்விட்டார்கள். அக்கா, ஒரு வீட்டுக்குச் சாப்பிட'ப் போய் விட்டாள். ஒரு பெண்ணுக்கு கல்யாணம் நிச்சயிக்கப் பட்டால் சொக்காரர்களும்-அதாவது பங்காளிகளும், ‘கொடுத்தான்-எடுத்தான் வகையறாக்களும் அந்த வீட்டுக்கு ஆடு கோழியோடு வந்து ஒரு மூட்டை அரிசியை வேகவைத்து ஆக்கிப் போடுவார்கள். குறைந்தது நூறுபேர், குழந்தைகளும் குட்டிகளுமாய் ஒரே பந்தியில் உட்காருவார்கள். இந்தச் சமயங்களில்தான் தீராத பகையும் தீரும். ஆனாலும் எந்தப் பெண்ணுக்காக “ஆக்கிப்” போட வந்தார்களோ, அந்தப் பெண்ணை சாப்பிட்டியா என்று கூட கேட்கமாட்டார்கள். ஆனாலும், இந்த வழக்கம் முகம் தெரியாத ஏதோ ஒரு வீட்டுக்குப் போகும் ஒரு பெண்ணுக்குத் தான் தனித்து விடப்படவில்லை என்ற தைரியத்தைக் கொடுக்கும். பக்க உறவாக இல்லாமலோ, அல்லது வசதியற்றவர்களாகவோ இருப்பவர்கள், சம்பந்தப் பட்ட பெண்ணை வீட்டுக்குக் கூட்டிவந்து தடபுடலாய்க் கோழியடித்து, சம்பா அரிசி பொங்கி, பெண்ணையும் சாப்பிட வைத்து, தாங்களும் சாப்பிடுவார்கள். இந்த வழக்கத்தின்படி, அன்றைக்குப் பூந்தோட்டத்தில் சுயம்புவுக்குப் பூக்கொடுத்தாளே, மலர்க்கொடி, அவள் வீட்டிற்கு மரகதம் போய்விட்டாள். மலர்க்கொடியின் அப்பா, வசதியில்லாதவர் அல்ல. காட்டான் மூட்டான் களோடு அரிசிப்பெட்டி எடுக்க அவருக்கு இஷ்டமில்லை. அந்த அளவுக்கு புதுப்பணம். மரகதமும், ஆயிரம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/133&oldid=1249275" இலிருந்து மீள்விக்கப்பட்டது