பக்கம்:வாடா மல்லி.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி 117


மாதிரி. எழுதுவதையே எழுதுகிறோம். பொய் வேஷம் கலைத்து, நிச வேஷம் போட்டு எழுதலாம். இது வெறும் கடிதமல்ல. சத்திய வாக்கு சத்தியத்திற்கு பொய்யோ, பொய் வேடமோ கூடாது என்று பொருள்.

சுயம்பு கதவைச் சாத்தினான். ஆனால், தாழ்ப்பாள் இடவில்லை. அடக்கமுடியாத ஆசை ஒரு பாதி, யாரும் பார்க்கமாட்டார்கள் என்ற எண்ணம் மறு பாதி. லுங்கியைக் கழற்றிக் கால் வழியாய் போகவிட்டுக் குவியலாக்கி, அந்தக் குவியலிலிருந்து வேறு பக்கம் குதித்தான். தங்கையின் வெளிறிய வெள்ளைப் பாவாடையை எடுத்துத் தலை வழியாய் விட்டு, அது முக்காடாய்க் கண்களை மூட, தலையை நிமிர்த்தி, பாவாடையை இடுப்புக்குக் கொண்டு வந்து, நாடாவை இறுக்கி, தூக்குப் போடுவது மாதிரியான ஒரு சுருக்கை ஏற்படுத்தினான். கைக்கு எட்டிய பிராவை எடுக்கப் போனான். அப்போதுதான் சட்டை போட்டிருப்பதை அறிந்து, அந்த நீலச்சட்டையை பட்டன்'களோடு சேர்த்துக் கிழித்து, இரு துண்டுகளாக்கி லுங்கிக் குவியலின் மேல் போட்டான். பிறகு காலால், அவற்றை எட்டி உதைத்து விட்டு, பிராவை எடுத்து, கொக்கியை மாட்டினான். எந்த ஜாக்கெட் பொருந்தும் என்பது போல், கொடியை மறைத்தவற்றில், ஒரு மஞ்சள் கலரைப் போட்டான். அந்தக் கலருக்கு மாட்சாக, சேலை இல்லாததால், போட்ட ஜாக்கெட்டைக் கழற்றிவிட்டு, சிவப்பு ஜாக்கெட்டை மாட்டிக்கொண்டு, அதே நிற வாயில் புடவையை எடுத்தான். பட்டுச்சேலை பக்கம் போன ஒரு கையை, இன்னொரு கை தடுத்தது. பாவம் அக்கா. இதைக் கடடிக் கொண்டுதான் வேற வீடுகளுக்கும் சாப்பிடப் போவாள்.’

சுயம்பு, புடவையின் ஒரு முனையை இடுப்புப் பக்கம் சொருகினான். சரியாக வரவில்லை. புடவை கட்டுவதே ஒரு கலை என்பது இப்போதுதான் அவனுக்குப் புரிந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/139&oldid=1249281" இலிருந்து மீள்விக்கப்பட்டது