பக்கம்:வாடா மல்லி.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xii


அமரர் ஆதித்தனார் அவர்களின் மூலம்தான் எளிய, இனிமையான தமிழைக் கற்றுக் கொண்டு என் படைப்புகளில் அதைப் பயன்படுத்தினேன். ஆகையால் ‘ஆதித்தனார் விருது, கிடைத்தது ஒரு வகையில் பொருத்தமே. விழா மேடையில் நான் அறிவித்ததுபோல், பரிசுத் தொகையில் பத்தாயிரம் ரூபாயை அலித் தோழர்களின் நலவாழ்விற்காக ஒதுக்கி இருக்கிறேன். இந்தப் பணம் கடலில் கரைத்த காயம், என்று சில நண்பர்கள் சொன்னதால் இந்தப் பணத்தையே மூலதனமாக வைத்து அலிகளுக்கும், அவர்களைப்போல் நலிந்தோர்க்கும் ஒரு அறக்கட்டளை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். அது முழுமையாக வடிவம் பெற இன்னும் நாளும், நேரமும் கூடி வரவில்லை.

இந்த நாவல் வந்தபிறகுதான் பல சிந்தனை யாளர்களுக்கு அலிகளைப் பற்றி நல்லவிதமான ஒரு கண்ணோட்டம் வந்திருக்கிறது. இன்னும் சில எழுத்தாளர்கள் இந்த நாவலைப் பற்றிக் குறிப்பிடாமலே தாங்கள் ஏதோ அலிகளைப்பற்றி முதல் முயற்சியாய் எழுதப் போவதாக தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். என்றாலும் இது இந்த நாவலின் வெற்றிதான். இந்த நாவல் மண்ணுக்குள் வேராக இருந்து அந்த வேரைவிடப் பெரிய அடிமரத்தையும் கிளைகளையும் தோற்றுவித்தால் அதுவும் ஒரு வெற்றிதான். ஆங்காங்கே அலிகளைப்பற்றிய விஞ்ஞானப்பூர்வமான கட்டுரைகளும், செய்திப்படங்களும், மனிதாபிமான சித்தரிப்பும் இந்த நாவலுக்குப் பிறகுதான் ஏற்பட்டுள்ளன. இது ஒரு ஆரோக்கியமான சங்கதி. கூவாகத்தில் ஆண்டுக்கொரு தடவை கூடும் அலிகளுக்கு, காமக் களியாட்டங்கள்தான் பெரிது என்பது போல் சித்திரிக்கும் பத்திரிகைகள்கூட இப்போது அவர்களுடைய பிரச்னைகளை முதல் தடவையாக வெளியிட்டுள்ளன... அதேசமயம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/14&oldid=1248940" இலிருந்து மீள்விக்கப்பட்டது