பக்கம்:வாடா மல்லி.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 சு. சமுத்திரம்


கொசுவம், முந்தானை, போன்றவை எப்படி உருவாகின்றன என்பது அவனுக்குச் சரியாகப் பிடிபடவில்லை. ஆனாலும் உடம்பு முழுவதும் தாறுமாறாகச் சுற்றினான். மாராப்பைக் காணோமே... எப்படியோ தோளுக்குக் கீழே ஒரு கைக்குட்டை அளவுக்கு அகலமான துணி கிடைத்தது. போதும் மாராப்பு. அப்புறம் எவள் கிட்டயாவது யோசனை கேட்டுக்கலாம்.

சுயம்பு, அந்த சீதனப் பீரோ மேலே இருந்த சாவியை எடுத்து, பீரோவைத் திறந்தான். அதன் மேல் தட்டிலிருந்த இன்னொரு சாவியை எடுத்து, லாக்கரைத் திறந்தான். மூன்று அட்டைப்பெட்டிகள். அக்காவுக்காக வாங்கிய நகை நட்டுக்கள். தங்க இழையின் ஆட்டியன் வடிவத்தில் கோர்க்கப்பட்ட மார்பளவுக்கான காசு மாலை. இன்னொரு பெட்டியில் ஒரு நெக்லஸ். மற்றொரு பெட்டியில் வெல்வெட் வளையங்களில் வைக்கப்பட்ட நான்கு தங்க வளையல்கள். பீரோவைப் பூட்டாமலே சாத்திவிட்டு அதன் ஒரு பக்கம் உள்ள செவ்வகக் கண்ணாடியில் தன்னைப் பார்த்தான். ஆனந்தம். அட மறந்துட்டேனே. மீண்டும் பீரோவைத் திறந்து அதன் மேல்தட்டிலேயே கிடந்த கொலுசுகளை எடுத்து, காலில் மாட்டிக் கொண்டான். கண்ணாடியில், பிரமிப்பாய் பார்த்தான். பீரோவுக்கு மேலிருந்த பவுடரைப் பூசிக்கொண்டான். டப்பியிலிருந்த குங்குமத்தை எடுத்து டேவிட், டேவிட்’ என்று சொல்லிக்கொண்டே நெற்றியில் திலகமிட்டான்.

கால் கொலுசுகள் ஜல்ஜல் என்று சத்தத்தை எழுப்ப, அங்குமிங்குமாய் நடந்து பார்த்தான். அதற்கு ஏற்ப, லேசாய் ஆடினான். ஒவ்வொரு காலையும் தூக்கித் தூக்கி, ஆட்டி ஆட்டி, நாதம் எழுப்பினான். கைகளைப் புரட்டிப் புரட்டி பொன்னொலி எழுப்பினான். மீண்டும் கண்ணாடியில் தன்னைப் பார்த்துக்கொண்டான். பாழாய்ப் போகிற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/140&oldid=1249282" இலிருந்து மீள்விக்கப்பட்டது