பக்கம்:வாடா மல்லி.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 சு. சமுத்திரம்


நெஞ்சை இட்டு திரம்பும். நீங்கள் என் டேவிட்டாச்சே..என்னைப் புதுப் பெண்ணைக் கூட்டிப் போவது போல், கைபிடித்துக் கூட்டிச்சென்ற காதல னாச்சே! நான் அந்த ராட்சசியால் அவமானப்பட்ட போது, அதைத் தீர்த்து வைச்ச கண்ணியனாச்சே! எனக்குக் காதல் வரம் கொடுத்த புண்ணியனாச்சே! ஒங்களுக்கா தெரியாது. நான் கோடு போட்ட இடத்தில் ஆருயிர்க் காதலர் என்று எழுத இடம் போதாது என்று பார்க்காமல் காதலனுக்குரிய அத்தனை வார்த்தைகளையும் உங்களுக்குத் தெரிந்துள்ள அத்தனை மொழிகளிலும் எழுதுங்கள். டேவிட்! எழுதுங்கள்.

“டேவிட்! உங்கள் பொன்முகத்தை, உங்கள் புகைப் படத்தைப் பார்த்துப் பரவசப்படுகிறேன். அதைப் பத்திர மாக பெட்டிக்குள் வைத்துப் பூட்டியிருக்கிறேன் டேவிட்! நீங்கள் அன்று, என் சட்டைப் பைக்குள் உங்கள் புகைப் படத்தை வைத்தபோது, சிந்தித்தேன் டேவிட்! கடவுளே. கடவுளே. எனக்கு இருதய ஆபரேஷன் நடக்க வேண்டும்! அதற்குள் என் டேவிட்டின் ஒரு சின்னப் புகைப் படத்தையாவது உள்ளே வைக்கவேண்டும். இதுவே என் வேண்டுகோள். டேவிட்! பதில் எழுதுவீர்களா டேவிட்! நீங்கள் எழுதாவிட்டாலும், நான் எழுதிக் கொண்டே இருப்பேன் டேவிட்! அவற்றை நீங்கள் படித்தாலே போதும் டேவிட்!”

வாசல் கதவு டப்பென்று திறக்கப்பட்டது. உள்ளே நுழைந்த மரகதம், “யாருடி நீ” என்று தன்னையறியாமலே கேட்டாள். அப்புறம் வாயில் கை வைத்தபடியே அவனை ஸ்தம்பித்துப் பார்த்தாள். அவனைச் சற்றிச் சுற்றி வந்து புலம்பினாள்.

“தம்பி.அய்யோ...என் தம்பி.” மரகதம் அய்யய்யோ, அய்யய்யோ என்றும், தம்பி, என் என் தம்பி என்றும் சொன்ன வார்த்தைகளையே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/142&oldid=1249284" இலிருந்து மீள்விக்கப்பட்டது