பக்கம்:வாடா மல்லி.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி 125


“எல்லாம் அந்த சீதாலட்சுமியோட வேலைதான். இவனும், அவளமாதிரியே முழிக்கான் பாரு.. அவள மாதிரியே இடுப்பக் குலுக்குறான் பாரு. கண்ணைச் சிமிட்டுறான் பாரு.ஏண்டி..தட்டுக்கெட்ட மூதேவி. ஒன்ன நாங்களாடி சாகச் சொன்னோம். இந்த வீட்டுக்கு வந்து இந்தப் பயல தம்பி தம்பின்னு சொன்னதாலேயே இவன் ஒனக்கு தம்பி ஆயிடுவானாடி...யாரையாவது பிடிக்கணும்னா, ஒனக்கு சமாதி கட்டிக்கிட்டிருக்கும் போதே ரெண்டாவது கலியாணத்துக்கு நிச்சயம் செய்துக்கிட்ட அந்தப் பலபட்டறப்பய’ ஒன் புருஷன் முத்துக்குமாரப் பிடி. ஒன் மாமன் நரங்கன பிடி: அப்படியும் முடியாட்டால், ஒன் மச்சுனன் கொக்கன பிடி, என் மகன எப்படிப் பிடிக்கலான்டி. எத்தனாவது சட்டத்துலடி இடமிருக்கு இரு இரு. பூவம்மா மயினிகிட்ட சொல்லி ஒன்ன பாதாளச் சிறையுல தள்ளுறேன்.”

“என்னம்மா நீ. பழைய கர்நாடகமா இருக்கே... ஒரு வேள மூளக் கோளாறோ என்னவோ...”

“சும்மா பினாத்தாதீங்க. உடல் கோளாறுதான்.” ‘பாத்தியா, பாத்தியா. இந்த மூதேவி சீதாலட்சுமி மாதிரியே அலுக்கிக் குலுக்கி பேசறான் பாரு. இந்த வார்த்தை இவனுக்குத் தெரியாத வார்த்தை! அந்தப் பாழாய்ப் போன சீதாலட்சுமி, அடிக்கடி சொல்லுற வார்த்த-பினாத்தாதீங்க..”

மரகதம், தம்பியின் நிலைமை அண்ணிக்குத் தெரியக் கூடாது என்பதில் இப்போது அக்கறை காட்டினாள். ஆகையால், சிறிது அறிவுபூர்வமாய்க் கேட்டாள்.

“அண்ணி, பிள்ளிங்கள எங்கம்மா. நல்லவேளை. இந்தக் கூத்த அவள் பார்க்கலே...”

“மூளி அலங்காரி. மூதேவி சண்டாளி! எங்க வீட்டுக்கு போறேன்னு, இடையிலேயே போயிட்டாள்.

10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/147&oldid=1249602" இலிருந்து மீள்விக்கப்பட்டது